Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
Copy rights issue contents will be removed without any notifications/warnings!!.
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
பொதுப்பகுதி
»
பண்டையக் காலத்தில் ரோமானியாவில் பின்பற்றப்பட்ட விசித்திரமான விஷயங்கள்..
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: பண்டையக் காலத்தில் ரோமானியாவில் பின்பற்றப்பட்ட விசித்திரமான விஷயங்கள்.. (Read 19 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 223036
Total likes: 27793
Total likes: 27793
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
பண்டையக் காலத்தில் ரோமானியாவில் பின்பற்றப்பட்ட விசித்திரமான விஷயங்கள்..
«
on:
July 27, 2025, 08:26:00 AM »
ரோம் நகரம் என்றாலே அதன் பண்டைக் கால நாகரிகமும், வரலாற்று சிறப்புமிக்க சுற்றுலா தளங்களும் தான் நினைவிற்கு வரும். ஆனால், இந்த கட்டுரை மூலம், அங்கே பின்பற்றப்பட்ட சில விசித்திரமான விஷயங்கள் குறித்து தெரிந்துக் கொள்ளலாம்..
புதிய இடங்களுக்கு பயணிக்கும் போது, நாம் நிறைய புதிய விஷயங்களை கற்றுக்கொள்கிறோம். கலாச்சாரம், உணவு, உடை, பண்பு, விழாக்கள், பழக்கவழக்கங்கள் பலவனவற்றை நாம் கற்றுக்கொள்ள பயணங்கள் உதவுகிறது. ஆனால், சில இடங்கள் புதியவை என்பதை தாண்டி சில விசித்திரமான அனுபவத்தை நமக்கு அளிக்கும். அப்படியான ஒரு இடம் மற்றும் அங்கே சுற்றுலா சென்றால், நாம் அறிந்துக் கொள்ள வேண்டியவை என்னென்ன?
ரோமா நகரம் என்றாலே நாம் அனைவருக்கும் மனதில் தோன்றுவது அதன் பண்டையகால சிறப்புகள் தான். அந்த சிறப்பின் காரணமாக தான், இன்றும் உலகின் முன்னணி சுற்றுலா தளமாக திகழ்கிறது ரோமானிய நகரம்.
1) ரோமானிய ஆட்சியாளர்கள் தங்கள் உணவில் தினமும் விஷம் கலந்து உண்டனர். ஏன் என்று கேளுங்கள்? வலுக்கட்டாயமாகவோ அல்லது வஞ்சகத்தாலோ எதிரிகளால் விஷம் குடிக்க நேர்ந்தால், விஷத்திற்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியைப் பெறுவதற்காகவே அவர்கள் அவ்வாறு செய்தனர்.
2) ரோமானிய பேரரசர்களுக்கு பல வலிமையான எதிரிகள் இருந்தனர், அவர்கள் ரோமானிய பேரரசர்களின் எல்லைகளை விரிவுபடுத்தும் திட்டங்களுக்கு பெரிதும் தடையாக இருந்தனர். பெர்சிய பேரரசானது ரோமானியர்களின் மிக மோசமான எதிரியாக கருதப்பட்டனர். அவ்விரு பேரரசுகளும் சுமார் 721 ஆண்டுகள் போரிட்டனர் என்கிறது வரலாறு.
3) ரோமானிய பேரரசே உலகின் மிகப்பெரிய பேரரசாக இருந்ததா? இல்லை என்பதே அதற்கு சரியான விடை. ரோமானிய பிரதேசங்கள் பூமியில் 12 சதவீதம் மட்டுமே இருந்தன; இதன் மூலம்,ரோமானிய பேரரசு உலகின் 28 வது பெரிய பேரரசாக விளங்கியது. உண்மையில், உலகிலேயே பிரிட்டிஷ் பேரரசே மிகப்பெரிய பேரரசாக திகழ்ந்தது.
4) சனி பகவானை தெய்வமாக வழிபடும் இந்திய பாரம்பரியத்துடன் ரோமானியர்களுக்கு குறிப்பிடத்தக்க ஒற்றுமைகள் இருந்தன. இந்திய ஜோதிடம் மற்றும் பிற பண்டைய நூல்களின்படி, சனிக் கடவுளானவர் அடிமைகள், ஊழியர்கள், தொழிலாளர்கள் மற்றும் சமுதாயத்திற்க்காக பிற ஊழியம் செய்கின்ற மக்கள் அனைவருக்கும் தலைமைக் கடவுளாக விளங்குகிறார். ஊழியர்களிடமும், தொழிலாளர்களிடமும் இரக்கமற்றவராக நடந்து கொள்வது சனி பகவானின் கோபத்தை அதிகரிக்கிறது என்று நம்பப்படுகிறது. அதேபோல், ரோமானியர்கள் சனி கடவுளைக் கொண்டாடுவதற்கும், சமாதானப்படுத்துவதற்கும் சாட்டர்னலியா என்ற திருவிழாவைக் கொண்டாடினர். கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக எஜமானர்கள் அடிமைகளாகவும் மற்றும் அடிமைகள் எஜமானர்களாகவும் பாத்திரங்களை மாற்றிக் கொள்ளும் பாரம்பரியம் இன்றுவரை நடைமுறையில் உள்ளது.
5) இனப்பெருக்கம் பற்றி ரோமானியர்களுக்கு மிகவும் கடுமையான விதிமுறைகள் விதிக்கப்பட்டிருந்தது. அவர்கள் சிற்றின்பங்களில் ஈடுபட்டிருந்தாலும், மக்கள் தொகை அதிகரிப்பைத் தவிர்ப்பதற்காக முட்டாள்தனமான பிறப்பு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளையும் விதித்தனர். அதற்காக அவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா? பிறப்பு கட்டுப்பாட்டுக்காக அவர்கள் ஒரு மூலிகையை பயன்படுத்தினார்கள்! இருப்பினும், ரோமானியர்கள் இந்த மூலிகையை மிகவும் பொறுப்பற்ற முறையில் பயன்படுத்தியதால், அந்த மூலிகையானது தற்போது முற்றிலும் அழிவடைந்துவிட்டது.
6) அழகிய கூந்தலுடைய ரோமானிய பெண்கள் பொன்னிற கூந்தலைப் பெற வேண்டும் என்று விரும்பினர். ரோமானிய இராணுவம் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியிலிருந்து இழுத்து வந்த பொன்னிற-முடி கொண்ட அடிமைகளால் அவர்கள் ஈர்க்கப்பட்டதால் அவர்கள் அவ்வாறு செய்ய விரும்பினர். ரோமானிய பெண்கள் தங்களின் கூந்தல் அடிமைகளின் பொன்னிற முடியை போன்று தெரிவதற்காக கூந்தலை சாயமிட்டு கொண்டனர்,ஆனால் அந்த பொன்னிறமானது தற்காலிகமானதாகவே இருந்தது, நிலைத்து நிற்கும் சாயப்பூச்சாக அவை இல்லை. இந்த சிக்கலைத் தீர்ப்பதற்காக, பொன்னிற கூந்தல் கொண்ட அடிமைகளின் தலைமுடிகள் கத்தரிக்கப்பட்டது, அந்த தலைமுடிகளை ரோமானிய பெண்கள் விக் ( செயற்கைக் கூந்தல் ) – ஆக செய்து அணிந்தனர்.
7) இரண்டு வகையான ஆடைகளை ரோமானியர்கள் அணிந்தார்கள். அவைகள் முறையே :டூனிக் மற்றும் டோகா ஆகும். ரோம் நகரைச் சேர்ந்தவர்கள் தங்களது குடியுரிமையின் அடையாளமாக டோகா வகை ஆடைகளை அணிந்தனர். சுற்றுலாவாசிகள், ஊழியர்கள், அடிமைகள், வெளிநாட்டவர்கள் மற்றும் சிலர் போன்றவர்களுக்கு டூனிக் வகை ஆடைகள் ஒதுக்கப்பட்டது.
8 ) அப்பல்லோ (சூரிய கடவுள்), ஜீயஸ் (வானங்களின் கடவுள்) போன்ற ரோமானிய கடவுள்களுடன் உலகம் அறிமுகமானது. ஆனால் பலருக்குத் தெரியாத விஷயம் என்னவென்றால், ரோமானியர்கள் கழிப்பறை கடவுளையும் வணங்கினர். கழிப்பறை கடவுள் கிரெபிட்டஸ் என்று அழைக்கப்பட்டார் .மூட்டு வலி, வாய்வு, மலச்சிக்கல் அல்லது வேறு ஏதேனும் செரிமானக் கோளாறு ஏற்பட்டால் ரோமானியர்கள் கழிப்பறை கடவுளை வணங்குவர் என்று வரலாற்றில் நம்பப்படுகிறது.
9) ரோமானிய இராணுவம் தொடர்ச்சியாக 14 நீண்ட நூற்றாண்டுகளாக வெல்ல முடியாததாக கருதப்பட்டது. மற்றவர்கள் ரோமானிய வீரர்களைக் கண்டு அச்சமுற காரணியாக அமைந்தது அவர்களின் வழக்கமான பயிற்சி முறைகள் ஆகும். இந்த பயிற்சி முறையானது ஒரு உறுதியான துவக்க முகாமை ஒத்திருந்தது.5 மணி நேரத்தில் 18 மைல்கள் நடந்தும், 5 மணி நேரத்தை 21 மைல்களை தங்கள் வேகமான நடைப்பயணத்தால் கடந்தனர்.இப்பயிற்சியானது, தினம்தோறும் தொடர்ந்தது.அதற்கு மேல், அவர்கள் 20 பவுண்டுகள் கவசத்தையும், 45 பவுண்டுகள் பையையும் சேர்த்து சுமந்தார்கள்..
10) ரோமானிய நகரை பற்றி இந்த விஷயங்கள் எல்லாம் அறிந்த பிறகும், ரோமானியாவில் இருந்தால், ரோமர்களாக இருக்க வேண்டும் என்ற பழமொழியை நீங்கள் தைரியமாக கூறுவீர்களா?!
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
பொதுப்பகுதி
»
பண்டையக் காலத்தில் ரோமானியாவில் பின்பற்றப்பட்ட விசித்திரமான விஷயங்கள்..