Author Topic: அப்பா💗💗💗  (Read 598 times)

Offline Asthika

அப்பா💗💗💗
« on: June 15, 2025, 03:22:24 PM »
மௌனமான மழையென பாசமழை பொழிவோர்,
முடிவில்லா அன்பின் மெளனக் காவலோர்.
தாயின் மடியில் கனிந்த பரிவு,
அப்பாவின் தோளில் பயந்த நம்பிக்கை.

கோதையும் கனவுகளும் கலந்த ஒவ்வொரு சுவாசம்,
தம் வாழ்க்கையை மரைமுகமாகவே நேசிக்கின்ற ஆசான்.
சொல்லாமல் செய்வது வழக்கம் அவர்க்கு,
சிறிய நமக்காக வாழ்வது நிழலாக.

நாட்களைக் கடந்து புரிகின்றது பாசத்தின் ஆழம்,
அப்பாக்களின் அன்பு என்பது அகண்டமாகும் அழகான தேசம்.
நன்றி சொல்ல முடியாத உயிரின் வடிவம்,
அப்பாக்கள் தான் – எல்லா வீடுகளின் பேரழகு சாயம்.


உலகிலுள்ள அனைத்து அப்பாக்களுக்கும் இனிய தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்