Author Topic: மகாபாரதம் உணர்த்தும் உண்மைகள்....  (Read 557 times)

Offline MysteRy



மோகத்தில் வீழ்ந்துவிட்டால்
மொத்தமாய் வீழ்ந்திடுவாய்
சாந்தனுவாய்....

சத்தியம் செய்துவிட்டால்
சங்கடத்தில் மாட்டிடுவாய்
கங்கை மைந்தானாய்..

முற்பகல் செய்யின்
பிற்பகல் விளையும்
பாண்டுவாய்....

வஞ்சனை நெஞ்சில் கொண்டால்
வாழ்வனைத்தும் வீணாகும்
சகுனியாய்...

ஒவ்வொரு வினைக்கும்
எதிர்வினை உண்டு
குந்தியாய்...

குரோதம் கொண்டால்
விரோதம் பிறக்கும்
திருதராஷ்டிரனாய்....

பெற்றோர்கள் செய்யும் பாவங்கள்
பிள்ளைகளை பாதிக்கும்
கௌரவர்கள்...

பேராசை உண்டாக்கும்
பெரும் அழிவினையே
துரியோதனனாய்...

கூடா நட்பு
கேடாய் முடியும்
கர்ணனாய்...

சொல்லும் வார்த்தை
கொல்லும் ஓர்நாள்
பாஞ்சாலியாய்..

தலைக்கணம் கொண்டால்
தர்மமும் தோற்கும்
யுதிஷ்டிரனாய்.....

பலம் மட்டுமே
பலன் தராது
பீமனாய்....

இருப்பவர் இருந்தால்
கிடைப்பதெல்லாம் வெற்றியே
அர்ஜூனனாய்....

சாஸ்திரம் அறிந்தாலும்
சமயத்தில் உதவாது
சகாதேவனாய்..

விவேகமில்லா வேகம்
வெற்றியை ஈட்டாது
அபிமன்யூ

நிதர்சனம் உணர்ந்தவன்
நெஞ்சம் கலங்கிடான்
கண்ணனாய்....

வாழ்க்கையும் ஒரு பாரதம்தான்....
வாழ்ந்திடலாம் காலமெல்லாம்.......