Author Topic: தங்கை !  (Read 1404 times)

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1276
  • Total likes: 4400
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
தங்கை !
« on: June 14, 2025, 03:35:28 PM »

தங்கை என்றால்
வயதில் சின்னவள்
பாசத்திலோ பெரியவள்

சின்ன சின்ன
வார்த்தைகளில்
பெரும் பாசம் ஒளிந்திருக்கும்

மழையில் குதிக்கும் குயில்போல
மனதில் ரீங்காரமிடும் அவள் சிரிப்பு

அம்மா, இங்க வா  இவங்க எனக்கு அடிச்சாங்க!" என்பாள்
பின் நிமிஷமே – "அண்ணா... சாக்லேட் வாங்கிட்டீங்களா
என்பாள் மழலையாய்

கண்ணீரும் மறு நிமிடம் சிரிப்புமாய்
மனதை மயக்கும் மாயக்காரி அவள்

பூவில் இருக்கும் தேனும் கூட
அவள் சொர்க்க புன்னகையில்
நாணம் கொள்ளும்

பூக்கள் போல கனவுகள்,
மழைதுளி போல நினைவுகள்,
அவள் நடமாடும் ஒவ்வொரு தருணமும்
கவிதையாய் கிறுக்குகிறது

தங்கை குறும்பு என் உலகின் சிரிப்பு,
தன் கண்களிலே தங்கும் என் சுகம்!
அவளின்றி நாளே கசப்பாய் விடும்,
அவளொருவரால் வீடும், வாழ்வும் அழகாகும்..

தாயின் இரண்டாம் உருவம் –
சிரிப்புடனும், சினத்துடனும்,
ஆனால்
முடிவில் முழுப் பாசத்துடனும்!

அவள் இருக்கும் வீடு என்றும்
சொர்கம்தான்  எனக்கு



*****JOKER****

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "