Author Topic: பெண்களின் ஏக்கம்  (Read 555 times)

Offline Asthika

பெண்களின் ஏக்கம்
« on: May 27, 2025, 11:12:59 PM »
மௌனமான கண்ணீர் ஒரு மொழி ஆகும்,
பிரசவ வலிக்குள் காதலின் இசை உண்டு.
வீட்டின் சுவர் போல் நிலை கொண்டு நிற்கிறாள்,
ஆனால், ஓர் நிழலாய் காணப்படுகிறாள்.

தன் கனவுகளை தூங்க வைக்கிறாள்,
பிறர் கனவுக்கு தூங்கி விழிக்கிறாள்.
ஒரு வார்த்தை பாராட்டுதலாக கேட்டாளே,
ஆனால், கடமையாகவே அவள் போனாள்.

சிறு சிரிப்புக்குள்ளே ஏர் நிறைந்த ஆசைகள்,
கண்ணின் ஒளிக்குள் மறைந்த தியாகங்கள்.
ஏக்கம் ஒரு பெண்ணின் இரவின் நட்சத்திரம்,
அது சுடும்... ஆனாலும் அழகு தந்திடும்.