Author Topic: நட்பை ஒரு நோயாக மாற்றி விடாதே !  (Read 1501 times)

Offline சாக்ரடீஸ்

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1959
  • Total likes: 6103
  • Karma: +0/-1
  • Gender: Male
  • 🍀Smile-Breathe-Find Peace🍀

நட்பை ஒரு நோயாக
மாற்றி விடாதே !


நட்பின் நிழலில்,
என்னுடன்
சில வார்த்தைகளைப் பகிர்ந்தாய்.
சிரிப்பின் மெல்லிய
அலைகளில் மிதந்தேன்.
ஆனால்,
என் மனம்
உன் நிழலில் தொலைந்து,
உன் பின்னால் ஓடுவதாக
நினைத்து விடாதே.

என் காதுகள்
உன் வார்த்தைகளை கேட்டனவே,
அவை வெறும் கேட்கும்
பொறுப்பை மட்டுமே செய்தன.
உன் மென்மையான
பேச்சில் மயங்கவில்லை
உன்னுடன் உரையாட
வேண்டும் என்ற
ஆசையும் எனக்கு இல்லை.

நாம் பகிர்ந்தவை
ஒரு சிறு தருணம்
நட்பின் காற்றில் மிதந்த
ஒரு இலையைப் போல,
எளிமையானது,
மரியாதையால் நிரம்பியது.
அதில் காதல் இல்லை,
வெறும் நட்பின் ஒளி மட்டுமே.

அர்த்தங்களைத் தவறாக்கி,
நட்பை ஒரு நோயாக
மாற்றி விடாதே.
நட்பு மரத்தின் நிழலைப் போல
யாரும் அதில் இளைப்பாறலாம்,
ஆனால் அதை கட்டிப்போட்டு,
வேறு பொருள் கொள்ள வேண்டாம்.