Author Topic: என் காதல் சொல்ல...  (Read 485 times)

Offline Mr.BeaN

என் காதல் சொல்ல...
« on: May 19, 2025, 09:00:00 AM »


அச்சம் மடம் நானமென
அத்தனை குணங்களுக்கும்
மிச்ச்ம் மீதி ஏதுமின்றி
மொத்தமான உருவம் நீ

தச்சர் கொள்ளர் பட்டரென
அத்தனை கலைஞருக்கும்
கற்பனைக்கும் எட்டாத
கலைப்பொருளின் உச்சம் நீ

உவமைகள் இல்லா கவிதை
உண்மையில் இனிக்காது
என்றுதான் பலரும் சொல்ல
ஏனென யோசித்தேன்

உன்னிடம் சேரா உவமை
உலகினில் உயிர்க்காது
என்று நான் கண்ட பின்னே
உன்னையே நேசித்தேன்..

இந்நொடி நேரம் காலம்
யாவுமெனை கடந்து செல்ல
நகராமல் நிற்கின்றேனே
உன்னிடம் காதல் சொல்ல..
« Last Edit: May 19, 2025, 01:46:35 PM by MysteRy »
intha post sutathu ila en manasai thottathu..... bean