« on: May 18, 2025, 01:18:44 PM »
ஆயிரம் எண்ண ஓட்டங்களோடு
உன் கரம்கோர்க்க ஒற்றை
சிந்தனையில் குறுகி போனேன்.
உன்னோடு என்னுலகம் இணைய
அன்யொன்றே நம்மை ஆள
இப்பிறவியின் பலனை அடைகின்றேன்.
மூன்று ஆண்டுக் கணா
நிறைவேறும் பூரிப்புடன் உனதருகில்
திருமணக் கோலத்தில் நான்
உனது பத்தாண்டு காத்திருப்பும்
எனது மூன்றாண்டு காத்திருப்பதும்
கைசேரும் தருணம் இது...
உன் பார்வை மட்டுமல்ல
வெட்கமும் எனை திண்ண
தோழிகளுடைய கேளிக்கைகளும்
சுற்றங்களின் வாழ்த்துகளும்
பெற்றோரின் ஆசீர்வாதமும்
ஒருசேர என்கழுத்தில் திருமாங்கல்யம்.
மனதில் மகிழ்ச்சி ததும்ப
இதழ்கள் புன்முறுவல் பூக்க
விழியெங்கும் உன்னுருவம் தெரிய
இன்பம் துன்பம் நோய்நொடி
அனைத்தையும் ஒன்றாக கடப்பேன்
என உறுதி ஏற்கிறேன்
அன்பனாக தோழனாக வழித்துணையாக
என யாதுமாக இருப்பவனே
எனக்காக பிறந்தவனே - இன்று
உன்னால் மீண்டும் பிறப்பெடுத்தேனடா!
உன்னை மணையாளாக மட்டுமல்ல
உன்னை சேய்யாகவும் சேர்கிறேன்...
அணிந்திருந்த அணிகலன்களும் மதிப்பிழந்தது
உன்கையால் ஏறிய திருமாங்கல்யதால்
உனை சேரவே இப்பிறவியேற்றேன்
இதை உயிருள்ளளவும் காப்பேன்.
யாவும் நீயாக மாறிநிற்க
ஒரு மனமாகின்றோம் திருமணத்தில்.
« Last Edit: May 19, 2025, 07:15:22 PM by Yazhini »

Logged