Author Topic: இயற்கை!  (Read 1031 times)

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1277
  • Total likes: 4408
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
இயற்கை!
« on: May 14, 2025, 07:23:17 PM »
இயற்கை ஒரு கவிதை

இயற்கையின் அற்புதம் போல்
இவ்வுலகில் வேறில்லை

மரங்கள் பேசும் சப்தம் கேள்,
நதியின் ஓசையும்  கேள்
நெஞ்சை நனைக்கும்.

மலர்களின் வாசனையில்
கவிஞன் தேடும்
உணர்வுகள் இருக்கும்

பாறைகள் சொல்லும்
காலத்தின் சாட்சியம்

மழைத்துளி விழுந்ததும்
மண்ணின் புன்னகை
மண்வாசமாய்
அது ஒரு
காதலின் மௌன வெளிப்பாடு

மண் நனைந்ததில்
நம் உள்ளத்தில் பூக்கும்
மகிழ்ச்சி

மரக்கிளையில்
கூவும் குயில்கள்
நம் பிரிவையும்
உணரவைக்கும்

செடிகளின் இடையில்
காணலாம் பறந்தாடும்
ஓவியமாய் பட்டாம்பூச்சி

கடலின்
காதல் பேசும்
மொழிகள்
அலைகலாய்

புதிய உருவங்களாய்
தோன்றும்
வெண்மேகங்கள் சொல்லும்
கதைகள்

ரசித்து பார்
இயற்கை ஒரு
வார்த்தையால்
எழுதப்படாத
ஒரு கவிதை
என்றும் வாசிக்க வேண்டிய
ஒவ்வொரு உயிர்க்கும் பாடம்


*****JOKER****


"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "