Author Topic: அன்பை விதைப்போம் !  (Read 909 times)

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1277
  • Total likes: 4408
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
அன்பை விதைப்போம் !
« on: May 13, 2025, 01:12:22 PM »
எனது
எழுத்துக்களில் 
நானில்லை என்று
உணரும் தருணம்
சில நேரம் வேடிக்கையாய் இருக்கிறது

நமது
கற்பனை உலகு
அழகானது
அதுவே
வாழ்வாக அமைவது
வரம்

மாறாத குணம்
மாற்ற இயலாத குணம்
இயல்பென கொள்க
அப்படி இயல்பிலேயே
நல்லவர்கள்
பொதுவெளியில்
கண்டுபிடிப்பதென்பது
அவ்வளவு எளிதல்ல
அவர்களை நேசித்தல் என்பது
சிரமுமல்ல

மனித இயல்புகளில்
முட்கள் மட்டுமே மிக அதிகம்.
அவை சொற்களாகவும்
சில நேரம்
வெளிப்படும்.

தன்னகத்தே
பல பொக்கிஷங்கள் கொண்ட
புத்தகங்கள்
என்றும்
பேரிரைச்சலை
வெளிப்படுத்துவதில்லை
ஆனால்
அதில் பதிந்திருக்கும் எழுத்துக்கள்
படிக்க படிக்க உங்களுக்குள்
கடத்தும் உணர்வுகள்
ஆச்சர்யம்

சில நேரம்
பூக்கவும் ,காய்க்கவும்
செய்யாத மரத்திற்கும்
கல் அடி படும்
அதற்காய்
அவை வருந்துவதுமில்லை

மரத்தின் கீழே
விழுந்து கிடக்கும்
பூக்களின் மேலே
நீங்கள் நடந்தாலும்
கோபம்கொள்ளாமல்
அவை உங்கள் மேல்
மீண்டும் பூக்களை தான்
கொட்டும்

வாழ்வு ஒரு அழுத்தம்தனை
தந்தபடி இருக்கிறது.
அதிலிருந்து மீள்வதாய்
வேறு ஒரு அழுத்தத்தில்
சிக்கி விடுகிறார்கள்

அனைவரிடத்திலும்
அன்பு நிறைந்திருக்க வேண்டும் எனும்
தன் பேராசையை வெளிப்படுத்தும்
மனதுக்காக

கவிதை என்று
நினைத்து நான்
எழுதுவதெல்லாம்
கவிதையல்ல எனினும்
எழுதுகிறேன்
அவை சில நேரம்
என் உணர்வுகளை
கடத்தும் என்ற ஆசையில்

அன்பை விதைப்போம்
அன்பையே அறுவடை செய்வோம்


****JOKER****


"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Online Yazhini

  • Sr. Member
  • *
  • Posts: 332
  • Total likes: 1373
  • Karma: +0/-0
  • 🔥 ரௌத்திரம் பழகு 🔥
    • Google
Re: அன்பை விதைப்போம் !
« Reply #1 on: May 13, 2025, 07:06:05 PM »
வாழ்வு ஒரு அழுத்தம்தனை
தந்தபடி இருக்கிறது.
அதிலிருந்து மீள்வதாய்
வேறு ஒரு அழுத்தத்தில்
சிக்கி விடுகிறார்கள்.
🤕பல நேரங்களில் நிகழும் நிகழ்வு.
Super 👏👏👏