Author Topic: காதல் திருடன்  (Read 651 times)

Offline சாக்ரடீஸ்

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1936
  • Total likes: 6016
  • Karma: +0/-1
  • Gender: Male
  • 🍀Smile-Breathe-Find Peace🍀
காதல் திருடன்
« on: May 07, 2025, 12:46:56 AM »
காதல் திருடன்

பட்டப் பகலில்
கூட்டம் நிறைந்த பேருந்தில் 
ஒரு பயணம்
மெதுவாக பேசத் தொடங்கினேன் நண்பர்களிடம்

இன்னைக்கு தான்
பார்த்தேன் ஒருத்தியை
அவ்வளவு பக்கத்துல
பாக்கும்போதே நான்
நொறுங்கி போயிட்டேன்

புறணி கேட்பது போல்
என் நண்பர்கள் கவனமாய் கேட்டனர்,
அதில் ஒருவன்
"மச்சான் எப்படி இருந்தாடா" என்றான்

நான் சொல்ல ஆரம்பித்தேன்
மெல்லிய வளைவு
பளிச்சென்ற மேனி
அந்த ஒளி அப்படியே
என் விழிகளுக்குள்

நீயே விழுந்துட்ட,
பேசாம காதலிச்சிடு
என்றார்கள் நண்பர்கள்,

நான் சிரிச்சுக்கொண்டே
சொன்னேன்
இவளோ நேரம்
அவளைப் பத்தியா
பேசிட்டு இருக்கேன்னு நினைச்சீங்க
நான் அவ கழுத்துல இருந்த
தங்க சங்கிலி பத்தி தான் பேசிட்டு இருந்தேன் என்று சொன்னேன்

நண்பர்களில் அட தூ என்றார்கள்

இப்படிக்கு

இதய திருடன் அல்ல நிஜத்திருடன்
« Last Edit: May 07, 2025, 12:53:22 AM by சாக்ரடீஸ் »

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1273
  • Total likes: 4368
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: காதல் திருடன்
« Reply #1 on: May 07, 2025, 11:50:46 AM »
மச்சி திருடன் சூப்பர்
நான் பாராட்டினது நிஜ திருடன  இல்ல
இந்த கவிதையால் எங்கள் மனதை கொள்ளை கொண்ட
இதய திருடனை  ;D ;D
« Last Edit: May 07, 2025, 12:19:44 PM by joker »

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline சாக்ரடீஸ்

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1936
  • Total likes: 6016
  • Karma: +0/-1
  • Gender: Male
  • 🍀Smile-Breathe-Find Peace🍀
Re: காதல் திருடன்
« Reply #2 on: May 07, 2025, 12:09:38 PM »
மச்சி மிக்க நன்றி 🤍