Author Topic: என்னது பச்சை மிளகாயில் இத்தனை சத்துக்கள் உள்ளதா? 🌶  (Read 529 times)

Online MysteRy




நாம் அன்றாடம் உணவில் சேர்க்கும் பச்சை மிளகாயை பலர், காரமாய் உள்ளது என்று ஒதுக்குவது உண்டு. அவ்வாறு பச்சை மிளகாயை ஒதுக்குவதை தவிர்த்து உணவில் சேர்ப்பதால் பல நன்மைகள் உண்டு. உடலில் உள்ள காயங்களை விரைவில் ஆற்றும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

பச்சை மிளகாயில் உள்ள ரசாயனமானது மூளையை தூண்டி, சில உடலை குளிர்விக்கும் ஹார்மோனை சுரக்கவைக்கும். ரத்தத்தில் உள்ள கொழுப்பை அகற்றும். இதனால் இருதய நோய் வராது. இருதயம் ஆரோக்கியமாக இருக்கும். பச்சை மிளகாயை நன்கு மென்று சாப்பிட்டால் வாயில் உமிழ் நீர் அதிகம் சுரக்கும். இதனால் உணவு எளிதில் ஜீரணமாகும். இந்த பச்சை மிளகாய் விட்டமின் சி சத்துக்கள் அதிகம் உள்ளது. நோய்கள் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும். பச்சை மிளகாயில் பொட்டாசியம், மக்னீசியம், இரும்பு சத்து அதிகம் இருப்பதால் சீரான இதய துடிப்பிற்கும், இரத்த ஓட்டத்திற்கும் பயனுள்ளதாக உள்ளது. பச்சை மிளகாயில் இருக்கும் விட்டமின் சி இரும்பு சத்தை கிரகித்துக்கொள்ள உதவுகிறது. இதனால் இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு சீராக இருக்க பச்சை மிளகாய் உதவுகிறது. இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகம் இருப்பவர்கள் பச்சை மிளகாய் அதிகம் சாப்பிடுவதால் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருக்கும். பச்சை மிளகாயில் சிலிகான் சத்து அதிகம் இருப்பதால் தலையில் இரத்த ஓட்டத்தை சீராக்கி முடி உதிர்வதை குறைக்க உதவுகிறது பச்சை மிளகாய்.