Author Topic: காய்கறி கீரைகள் வாடாமல் இருக்க சூப்பரான டிப்ஸ் .....!  (Read 582 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226522
  • Total likes: 28958
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/


🍀 வாழைத்தண்டுகள், கீரைத்தண்டுகள் மற்றும் கொத்தமல்லி இலைகள் வாடாமல் இருக்க அவற்றை அலுமினியம் காகிதத்தில் சுற்றி வைக்கலாம்.

🍀 பச்சை பட்டாணி வாடிப் போகாமல் இருக்க, உரித்த பட்டாணியை, உப்பு சேர்த்து கொதிக்கும் நீரில் போட்டு, ஒரு நொடியில் வெளியில் எடுத்து, நன்கு உலர்த்தி தண்ணீர் காய்ந்ததும், காற்று புகாத பிளாஸ்டிக் கவரில் போட்டு பிரீசரில் வைத்தால், ஆறு மாதங்கள் வரை கெடாமல் இருக்கும்.

🍀 கறிவேப்பிலை காயாமல் இருக்க வேண்டுமானால் அதன் மீது ஓர் அலுமினியப் பாத்திரத்தை மூடி வைத்தால் அது காயாமல் இருக்கும்.

🍀 கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழையை வாங்கிய உடன் வாழைப் பட்டையில் சுற்றி வைக்க வாடாமல் இருக்கும்.

🍀 கத்தரிக்காய் வாடாமல் இருக்க ஹாட் பாக்ஸில் வைத்து கத்திரிகாயை மூடினால் காய் வாடாமல் இருக்கும்.

🍀 எலுமிச்சை பழத்தின் ஒரு மூடியை மட்டும் பயன்படுத்திவிட்டு, மற்றொரு மூடியை, அலுமினிய காகிதத்தில் போட்டு கட்டி, பிரிட்ஜில் வைத்தால் வாடாமல் இருக்கும்.

🍀 காய்கறிகளை நீண்ட நாட்கள் வாடிப் போகாமல் இருப்பதற்காக பேப்பரை அந்த காய்கறிகளின் மீது சுற்றிவிட்டால், காய்கறிகள் நீண்ட நாட்கள் வாடாமல் இருக்கும்.

🍀 காளான்களை பிளாஸ்டிக் கவரினுள் போட்டு வைப்பதற்கு பதிலாக சாதாரண பேப்பரில் சுற்றி வைத்தால் நீண்ட நேரத்துக்கு ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.
« Last Edit: April 16, 2025, 01:18:34 PM by MysteRy »