Author Topic: ~ உடல் ஆரோக்கியம்: சில நம்பிக்கைகளும்...உண்மைகளும்! ~  (Read 1028 times)

Offline MysteRy

உடல் ஆரோக்கியம்: சில நம்பிக்கைகளும்...உண்மைகளும்!


Jogging & Exercising doesn't help lose weight


ஜாக்கிங் செய்தால் உடல் எடை குறையும் என்பது உள்பட உடல் ஆரோக்கியத்தில் சில நம்பிக்கைகள் நம்மிடையே காணப்படுகிறது. அதுபோன்ற சில நம்பிக்கைகளும், மருத்துவ நிபுணர்கள் சமீபமாக கண்டறிந்து கூறியுள்ள உண்மைகளும் கீழே:

ஜாக்கிங்:

ஜாக்கிங் செல்வதினால் உடல் எடை குறையும் என்றுதான் இதுநாள் வரை நாம் எண்ணிக்கொண்டிருக்கிறோம். ஆனால் அது அந்த நம்பிக்கையை அடித்து நொறுக்கியிருக்கிறது பிரிட்டன் மருத்துவ ஏடு ஒன்று வெளியிட்டுள்ள ஒரு ஆய்வறிக்கை!

கொழுப்பு என்பது நமது உடலின் விருப்பமான சக்தியாகும். நீங்கள் அதிகமாக ஓடினால், உங்களது உடல் அடுத்த ஓட்டத்திற்கு தானாகவே தன்னை தயார்படுத்திக்கொண்டுவிடும். இதன் மூலம் உங்களது உடல் இன்னும் அதிக கொழுப்பை சேமிக்க தொடங்கிவிடும் என்று கூறுகிறார் இந்த ஆய்வை மேற்கொண்ட பிரிட்டனின் மருத்துவ நிபுணரான டாக்டர் புரூக்கர்ஸ்.

" நமது உடல் ஒரு வியக்கத்தகு எந்திரம்.எந்த ஒன்றையும் அது கிரகித்துக்கொள்ளும் ஆற்றலுடையது. நீங்கள் அதிக நேரம் ஓடினால், நீங்கள் அதிக ஆற்றலை பெறுவீர்கள். குறைந்த ஆற்றலை நீங்கள் பயன்படுத்தினால், குறைந்த கலோரிகளே எரிக்கப்படும்.

மேலும் ஜாக்கிங் எனப்படும் ஓட்ட பயிற்சி, உங்களது கால் மூட்டுகளுக்கு நல்லதல்ல.
நீங்கள் ஓடும்போது உங்களது உடலின் இரண்டரை மடங்கு பளு உங்களது மூட்டுகள் ஊடாக கடத்தப்படுகிறது.

அவ்வாறு இந்த அழுத்தம் மீண்டும் மீண்டும் நடைபெறும்போது, உங்களது மூட்டுக்கள் பலவீனமாகிவிடும்.

எனவே மற்ற எந்த உடற்பயிற்சியும் உடல் எடையை குறைக்கலாம்;ஆனால் ஓட்ட பயிற்சி அதற்கு நேர்மாறான விளைவுகளை ஏற்படுத்தும்" என்கிறா புரூக்கர்ஸ்.



உடற் பயிற்சி:

அதேப்போன்று உடற்பயிற்சி செய்தால் உடல் எடை குறையும் என்ற நம்பிக்கையும் நம்மிடையே உள்ளது.மருத்துவர்களும், ஃபிட்னஸ் ஆலோசகர்களும் கூட அதையேதான் இப்போது வரை வலியுறுத்தி வருகிறார்கள்.

ஆனால் உண்மை நிலை வேறு என்கிறது மருத்துவ ஆய்வு ஒன்று.இதுவும் பிரிட்டனில்தான் நடத்தப்பட்டுள்ளது.

உடற் பயிற்சி உடலுக்கு அவசியம்தான் என்றாலும், அது உடல் ஆரோக்கியத்தின் ஒரு பகுதியாகவும், சமச்சீரான வாழ்க்கை முறைக்கும் மட்டுமே உதவுகிறதே தவிர, அது உடல் எடையை குறைக்காது.

கட்டுப்பாடான மற்றும் சரிவிகித உணவே உடல் எடையை குறைக்கும் என்றும் அந்த ஆய்வு கூறுகிறதாம்.

இது தொடர்பாக இந்த ஆய்வை நடத்திய பிரிட்டனிலுள்ள அபர்டீன் பல்கலைக்கழக மருத்துவ பேராசிரியர் ஜான் ஸ்பீக்மேன்,"உலகம் முழுவதும் இன்று அதிகரித்து வரும் உடல் பருமன் பிரச்சனைக்கு முக்கிய காரணம், அளவுக்கு அதிகமாக, கலோரி அதிகம் நிறைந்த உணவுகளை கட்டுப்பாடில்லாமல் எடுத்துக்கொள்வதுதானேயொழிய, உடற் பயிற்சி செய்யாததினால் அல்ல" என்று கூறுகிறார்.