Author Topic: :வெந்தயக்கீரை பருப்பு சப்ஜி  (Read 1266 times)

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 45
  • Total likes: 45
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
கொளுத்தும் வெயிலில் கீரை வகைகளை சேர்த்துக்கொள்வது உடம்புக்கு ரொம்ப நல்லது. குறிப்பா வெந்தயக்கீரை குளிர்ச்சியை தரக்கூடியது என்பதால் அடிக்கடி உணவில் சேர்ப்பது நல்லது. ஒரேமாதிரி சமைக்காமல் இந்த மாதிரி வித்தியாசமாக பருப்பு சப்ஜி செய்து சாப்பிடலாமே......!

தேவையான பொருட்கள்:

கடலைப்பருப்பு - 1/2 கப்
வெந்தயக்கீரை - 2 கட்டு
பெரிய வெங்காயம் - 1
பூண்டு - 4 பல்
மிளகாய்தூள் - ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
சீரகத்தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எலுமிச்சம்பழச் சாறு - ஒரு டேபிள் ஸ்பூன்

தாளிக்க:

சீரகம் - 1/2 டீஸ்பூன்
கடுகு - 1/4 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

* கடலைப்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து, குழையாமல் வேகவையுங்கள்.

* கீரையை சுத்தம் செய்யுங்கள்.

* பூண்டு, வெங்காயத்தை தோலுரித்து பொடியாக நறுக்குங்கள்.

* எண்ணெயைக் காய வைத்து கடுகு, சீரகம் தாளித்து பூண்டு சேருங்கள்.

* பூண்டு வதங்கியதும் வெங்காயத்தையும் சேர்த்து வதக்குங்கள்.

* அத்துடன் கீரை, மிளகாய்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கி, பருப்பை சேருங்கள்.

* சிறு தீயில் நன்கு வதக்கி எடுக்கும்பொழுது எலுமிச்சம்பழச் சாறு சேர்த்து கிளறி இறக்குங்கள்.

* தண்ணியாக இல்லாமல் சிறிது கெட்டியாக இருப்பதுதான், ஸ்பெஷல்.

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்