Author Topic: கனவு இல்லம்  (Read 697 times)

Offline Mr.BeaN

  • Full Member
  • *
  • Posts: 247
  • Total likes: 787
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நான் நானே நிகர் ஏதுமில்லை..
கனவு இல்லம்
« on: April 24, 2025, 09:42:33 PM »
கடைக்கால் போட்டு
கல் பூட்டி சுவரெழுப்பி
கடுக்காய் சாந்திட்டு
மேற்கூரை தான் அமைத்து
மிடுக்காய் முகப்பை
மெருகேற்றி அழகாக்கி
எடுப்பாய் நிறம் தேடி
வர்ணத்தில் குளிப்பாட்டி
குடியும் புகுவதுவா
கனவில்லம் எனக்கிங்கே

செருக்கை களைத்து
குலம் காக்கும் சிரங்கள்
பருக்கை குழைத்து
பரிமாறும் கரங்கள்
களைப்பை அகற்ற
தலை கோதும் விரல்கள்
பிறப்பை உணர
அறிவூட்டும் குரல்கள்
அன்பை அள்ளி
தருகின்ற தாயும்
அறிவை நமக்கு
ஊட்டிடும் தந்தை
ஏதும் பகிர
செவிமடுக்கும் துணையார்
எந்தன் குரலை
ஏற்க்கின்ற குழந்தை
என்றே எல்லாம்
ஓரிடம் சேர
அதுவே எந்தன்
கனவில்லம் ஆகும்!!
intha post sutathu ila en manasai thottathu..... bean

Offline Yazhini

  • Sr. Member
  • *
  • Posts: 326
  • Total likes: 1322
  • Karma: +0/-0
  • 🔥 ரௌத்திரம் பழகு 🔥
    • Google
Re: கனவு இல்லம்
« Reply #1 on: May 01, 2025, 12:57:32 AM »
💙 மிக அருமை👏👏👏