Author Topic: நல் வாழ்வு  (Read 647 times)

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1269
  • Total likes: 4361
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
நல் வாழ்வு
« on: March 29, 2025, 08:00:04 PM »
காலையில் எழுந்ததும்
பாடும் குருவியிடம்
ஒருவர் கேட்டார்..
உன் கூடு நேற்று அல்லவா
எரிந்தது?

பின் எப்படி
உன்னால்
இவ்வளவு அழகாக
பாட முடிகிறது  என

அப்போது
குருவி சொன்னது
காலையில் பாடுவது
என் இயல்பான கடமை.
நேற்றைய இழப்பிற்கு மதிப்பில்லை
இன்றைய நல்வாழ்வு
உங்களுக்கானது
அதனால்
இனிமையாகப் பாடுகிறேன் என

ஒரு அழகான
பூவின் வாழ்வென்பது
மலர்ந்து
நல்ல வசந்தகாலத்தின்
வண்ணமாக இருக்கவேண்டும்
வாசனையை பரப்பி
யாராலும் பறிக்கப்படாமல்
தானாய் உதிர்ந்து
மண்ணை அடைய வேண்டும்

அது போல தான்
நல்ல மனிதராக வாழுங்கள்
அவதூறு மற்றும் வஞ்சகம் இல்லாமல்
 
சில சமயங்களில்
சமூகத்தை நேசிக்கக் கற்றுக்கொண்டவர்
மிகக் குறுகிய காலமே வாழ்ந்தாலும்
எல்லோர் மனதிலும் அவர் என்றும் வாழ்கிறார்.

நல்லவர்கள் சிலர்
போதைக்கு அடிமையாகி
வாழ்க்கையையும், குடும்பத்தையும்
இழக்கும் இந்த கட்டத்தில்,

நம் பெற்றோர்கள்
நல்லதைச் சொன்னால்,
அதைக் கடைப்பிடிக்க கற்றுக்கொள்ளுங்கள்.
அப்போதுதான்
ஒரு நல்ல வாழ்க்கையையும்
ஒரு நல்ல சமூகத்தையும்
ஒரு நல்ல தேசத்தையும்
உருவாக்கமுடியும்

நேற்று வரை
நடந்த சோகம்
மனதில் கொண்டு சுமக்காமல்
முடிந்தவரை
பிறரின் மகிழ்வுக்கும்
ஓர் புன்சிரிப்பிற்கும்
காரணமாய்
இருப்போம்
இவ்வாழ்வை
ரசிப்போம்


****JOKER****

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline சாக்ரடீஸ்

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1933
  • Total likes: 6014
  • Karma: +0/-1
  • Gender: Male
  • 🍀Smile-Breathe-Find Peace🍀
Re: நல் வாழ்வு
« Reply #1 on: March 29, 2025, 10:55:40 PM »
மிகவும் அழகான வரிகள் மச்சி

நேற்று வரை
நடந்த சோகம்
மனதில் கொண்டு சுமக்காமல்
முடிந்தவரை
பிறரின் மகிழ்வுக்கும்
ஓர் புன்சிரிப்பிற்கும்
காரணமாய்
இருப்போம்
இவ்வாழ்வை
ரசிப்போம்