Author Topic: நாமக்கல் முட்டை குருமா 💖  (Read 1560 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226462
  • Total likes: 28898
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/



தேவையான பொருள்கள்:

1. முட்டை

2. எண்ணெய்

3. தயிர்

4. தனியாத் தூள்

5. மிளகுத் தூள்

6. மஞ்சள் தூள்

7. கசகசா

8. பட்டை

9. லவங்கம்

10. கருவேப்பிலை

11. சோம்பு

12. முந்திரிப் பருப்பு

13. இஞ்சி

14. பூண்டு

15. தேங்காய்

16. பெரிய வெங்காயம் மற்றும் தக்காளி

17. பச்சை மிளகாய்

18. உப்பு

செய்முறை:

1. முட்டையை வேக வைத்துக் கொள்ளவும்.

2. வெங்காயத்தையும், தக்காளியையும் சிறிது, சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.

3. ஒரு வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அது நன்கு காய்ந்ததும் பட்டை, லவங்கம், சோம்பு ஆகிய இவை அனைத்தையும் சேர்த்து நன்கு தாளிக்கவும்.

4. மேற்கண்டவற்றுடன் வெங்காயம், தக்காளி ஆகிய இவற்றை சேர்த்தும் வதக்கவும்.

5. இப்போது அரைத்த இஞ்சி, பூண்டு விழுது, மஞ்சள் தூள், தனியாத் தூள், மிளகாய்த் தூள் ஆகிய இவை அனைத்தையும் சேர்த்து நன்கு கிளறவும்.

6. மேற்கண்டவற்றுடன் அரைத்து வைத்த தேங்காய், கசகசா, முந்திரிப் பருப்பு ஆகிய இவை அனைத்தையும் சேர்த்து மீண்டும் நன்கு கிளறவும்.

7. இப்படியாக மேற்கண்ட பொருள்களைக் கொண்டு அரைத்து உருவாக்கிய கலவை மிகவும் கெட்டியாகவும் இருக்கக் கூடாது. அதே சமயத்தில் நீர்த்தும் இருக்கக் கூடாது. இந்த பதத்தில் இருக்கும் சமயத்தில் முட்டைகளை துண்டுகளாக்கி சேர்த்து உடன் உப்பையும் தேவைக்கு ஏற்றார் போல சேர்த்து மசாலா வெந்ததும் இறக்கி விடவும்.

8. இதோ இப்போது சுவையான முட்டை குருமா தயார்.

முட்டையை அன்றாடம் தேவையான அளவு எடுத்துக் கொண்டால் புற்று நோய் வரும் அபாயம் குறையும்.
..
« Last Edit: March 27, 2025, 08:53:33 AM by MysteRy »