Author Topic: கண்ணீர்  (Read 865 times)

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1229
  • Total likes: 4155
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
கண்ணீர்
« on: February 25, 2025, 05:54:44 PM »
யாரோ என்னை
அழைத்தது போல
உணர்கிறேன்

மெல்ல எட்டி பார்க்கிறேன்
எனக்கான வரம்பில்
யாருமில்லை

அவ்வப்போது
தப்பி வர நினைத்திருக்கிறேன்
முடியவில்லை

என்னை
தன்னுள் அடக்கி வைத்திருந்தவன்
இன்று எனோ எனக்கு
அணையிட மறுக்கிறான்

மெல்ல மெல்ல
ஓரமாய்
உருண்டோடி
வருகிறேன்

எதற்காக என்னை
வெளியில் வர வைத்தான்
என எனக்கு தெரியவில்லை

உருண்டோடி
அவன் கன்னம் கடந்து
உதட்டில் படிந்து தப்பி
தாடையினூடே
மண்ணில் விழுந்தேன்

என்னை வெளியில்
வரவைத்தவனுக்கு
நிம்மதி கண்டு
புது வாழ்வு கிடைத்தால்
மண்ணில் விழுந்து
மரணித்த எனக்கு
சாப விமோசனம்
கிடைக்குமோ
என்னமோ ?!

நான்
பல நிலைகளில்
வெளிப்படுவேன்

இந்த மனிதன்
சந்தோஷத்தின் உச்சியில்
இருந்தாலும்
வலியில்
துடித்தாலும்
வழியில் தொலைந்தாலும்
துக்கத்தின் விளிம்பில்
இருந்தாலும்
என்னை அழைக்காமல்
இருப்பதில்லை
எனக்கு இவன் வைத்த
பெயர்

"கண்ணீர்"


****JOKER****

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline Thooriga

  • Sr. Member
  • *
  • Posts: 306
  • Total likes: 639
  • Karma: +0/-0
  • Gender: Female
  • இசையின் காதலி
Re: கண்ணீர்
« Reply #1 on: February 26, 2025, 09:25:07 AM »
அருமை