Author Topic: என் உயிர் தோழனுக்காக  (Read 462 times)

Offline Thooriga

என் உயிர் தோழனுக்காக
« on: March 28, 2025, 12:55:49 PM »
எதிர் பாராமல் அமைந்த தோழன் நீ

ஆண் பெண் என்ற பாகு பாடு நம்முள் இல்லை ..

வாரத்திற்கு ஒருமுறை தான் நம் உரையாடல் இருக்கும் .. இருப்பினும் யாரோவாக அல்லாமல்,
என் தோழன், என்ற உரிமையோடு  இறுதியில் முடித்த, அதே அன்பில் மீண்டும் தொடங்கும் நம் அரட்டைகள்...

ஆண் தோழர்கள் உனக்கு ஆயிரம் இருக்கலாம் ...

இருந்தும் மறவாதே என் நிலையிலும் .. உன் கண்ணீர் துடைக்க ,

உன் புன்னகையை பகிர்ந்து கொள்ள

உன் தோழி நான் உள்ளேன் என்பதை ..

என்றும் நட்புடன்

தூரிகா