Author Topic: உனக்கான என் கவிதைகள்  (Read 633 times)

Offline Thooriga

  • Sr. Member
  • *
  • Posts: 306
  • Total likes: 639
  • Karma: +0/-0
  • Gender: Female
  • இசையின் காதலி
உனக்கான என் கவிதைகள்
« on: February 22, 2025, 03:27:16 PM »
உன்னோடு மட்டும் பொருந்திப் போகிறது என் கவிதைகள்.

உன்னை நினைக்க வேண்டாம் என்று என் மனம் சொல்கிறது.. ஆனால் அந்த மனது தான் எப்போதும் உன்னை பற்றி நினைத்து கொண்டு இருக்கிறது.

உனது இதயத்தில் எனக்கான இடத்தை யாரையோ வைத்து நிரப்பியவனாய் நீ..!! ஆனால் உன்னுடைய இடத்தை யாரையும் நிரப்ப விடாதவளாய் நான்.

ஒரு இதயத்தை உண்மையாக நேசித்து பார்.. ஆயிரம் இதயங்கள் உன் அருகில் இருந்தாலும் உன் கண்கள் நீ நேசிக்கும் இதயத்தை மட்டும் தேடும்.

பெய்து விட்டதாய் சொல்லப்படும் மழை மீண்டும் மீண்டும் வேண்டப்படுகிறது.. என்னில் பொழியும் உன் நினைவுகளை போல.


என் தேடலில் கிடைத்த மிகச் சிறந்த பொக்கிஷம் உன் நினைவு.

தாகம் கொண்ட என் இதயத்தில் விழுந்த ஒற்றை மழைத்துளி நீ.

பூவின் மீது விழுந்த மழைத்துளி மேலும் அழகானது போல், என்மீது விழுந்த உன் அன்பும் ஒவ்வொரு நொடியும் பேரழகாய் தெரிகிறது.


கண்கள் திறக்கும் வரை தான் கனவு நீடிக்கும்.. ஆனால் என் கண்கள் மூடும் வரை உன் நினைவு நீடிக்கும்.

பொய்யாக நேசிப்பவர்கள் கூட சந்தோஷமாக இருக்கின்றனர். உண்மையாக நேசிப்பவர்கள் தான் அதிகம் காயப்படுகின்றனர்.


விலகி போனாய் நெருங்கி வந்தேன்.. வெறுத்து போனாய் விரட்டி வந்தேன்.. இனி நிச்சயம் வற்புறுத்த மாட்டேன்.. உன்னை மட்டும் அல்ல உன் நிழலையும்.

நீயாகத் தேடி வந்து தந்த காதல், இன்று நானாகத் தேடியும் கிடைக்காமல் போனது ஏன்.

உன் மௌனத்தில் உள்ள வார்த்தைகளையும் உன் கோபத்தில் உள்ள அன்பையும் யாரால் உணர முடிகிறதோ அவர்கள் தான் உனக்காக படைக்கப்பட்டவர்கள்.


காலம் சென்றாலும், கனவுகள் மறைந்தாலும், கவிதைகள் அழிந்தாலும், என் உயிர் பிரிந்தாலும், காற்றோடு தொடர்ந்து வருவேன், உன் அன்புக்காக.