Author Topic: 💥 மாற்றம் 💥  (Read 570 times)

Offline Yazhini

💥 மாற்றம் 💥
« on: February 18, 2025, 01:11:22 AM »

என்னவனே! என் இனியவனே!
தியாகம் என்ற ஒன்றும் காதலே!
நான் என்பதை உனக்காக
தியாகம் செய்கையில்...

என் கர்வம் அனைத்தையும்
உனக்காக இழக்கையில்...
உன் அருகாமைக்காக
அனைத்தையும் தவிர்பதில்...

அறியாமையின் விளும்பில்
உனை பற்றுதலில்...
துன்பம் அனைத்தையும்
இன்பமாக மாற்றுதலில்...

முடிவில் நான் என்பது
நாமாக மாறுகையில் ❣️❣️❣️