Author Topic: ✨ நினைவு (வடு) ✨  (Read 640 times)

Offline Yazhini

✨ நினைவு (வடு) ✨
« on: February 17, 2025, 01:48:20 AM »
 ✨ நினைவு (வடு)

மீளா இன்பமும் மீளா துன்பமும் நீயே...
என் முடிவிலி பயணம் நீயே...
அன்பெனும் விதை விதைத்த வேந்தே!
பாறையில் விழுந்த அந்த விதையும் உயிரோடு இருந்தது உன்னால்...
அழியும் இருப்பில் அழியா நிழல் நீயே...
காயத்தை ஆற்றிய உன்னிடமே
மீண்டும் மீண்டும் காயப்பட
எத்தனிக்கும் மனது....
வடுவாகவே இருக்கும்
உன் நினைவும் நிறைவே!!!
« Last Edit: February 17, 2025, 01:50:15 AM by Yazhini »