Author Topic: சட்னி செய்ய சூப்பரான டிப்ஸ் ....  (Read 4077 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226626
  • Total likes: 29010
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/


சட்னி செய்ய சூப்பரான டிப்ஸ் ....

இஞ்சி, பூண்டு, சட்னி தயாரிக்க இரண்டையும் 2க்கு மூன்று என்ற விகிதத்தில் சேர்க்க வேண்டும். இஞ்சியை குறைவாக பயன்படுத்தினால் பண்டம் ருசியாக இருக்கும்.

தேங்காய் சட்னி அரைக்கும் போது பாதி தேங்காயும், பாதி கொத்தமல்லியும் சேர்த்து அரைத்தால் சட்னி மிகவும் சுவையாக இருக்கும்.

தேங்காய் சட்னி மிகுந்துவிட்டால், அவற்றுடன் புளிக்காத தயிர், பொடியாக அரிந்த வெங்காயம் அல்லது காராபூந்தி சேர்த்துக் கலந்தால், சுவையான பச்சடி தயார்.

தக்காளி, வெங்காயம் போன்ற சட்னி செய்யும்போது சிறிது கறுப்பு எள்ளை வறுத்துப் பொடி செய்து போட்டால் சட்னியின் மணமும் ருசியும் கூடுதலாக இருக்கும்.

துவையல் அரைக்கும் போது, மிளகாய் சேர்ப்பதற்கு பதிலாக, மிளகு சேர்த்து அரைத்தால் துவையல் ருசியாகவும், மணமாகவும் இருக்கும்.

கொத்தமல்லி, புதினா துவையல் அரைக்கும் போது தண்ணீருக்குப் பதிலாக சிறிது தயிர் சேர்த்து அரைத்தால் சுவையாக இருக்கும்.....