Author Topic: காதல் சொல்ல வந்தேன்..  (Read 958 times)

Offline Mr.BeaN

  • Full Member
  • *
  • Posts: 247
  • Total likes: 787
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நான் நானே நிகர் ஏதுமில்லை..
காதல் சொல்ல வந்தேன்..
« on: August 10, 2024, 03:52:30 PM »

அந்தி சாயும் வேளையிலே
ஒத்த ஜடை பின்னலிலே
இரட்டை சரம் பூ தொடுத்து
நெற்றி சுட்டும் பொட்டோடு
பட்டு சேலை அணிந்தபடி
பக்குவமாய் புன்னகைத்து
பரிசெனவே நீ வந்து
பேசி சென்ற ஓர் நாளில்
செருவாடு சேர்த்து வைக்கும்
சுருக்கு பை போலே
சுருங்கி போன என் மனசும்
பூவாட்டம் விரிஞ்சதடி
மத்தியான வெயிலும் என்
மண்டை மேல பட்டும் கூட
மருதாணி குளிர்ச்சியாக
மண்டையுமே உணர்ந்ததடி

வச்ச பூவ நீ
இரு பக்கம் பிரிச்சு விட்டு
நெஞ்சின் மேலே நீ
நெடுங்கிடையாய் தொங்க விட
அந்த பூச்சரத்தின்
அடியை தான் பிடிச்சுக்கிட்டு
எந்தன் உசுரும் தான்
உங்கூட வந்திருச்சே
கெண்டை காலின் மேல்
கொழுசொண்ணு அணிஞ்சிருக்க
உந்தன் நடையோடு
ஒருமித்து சத்தமிட
கேட்கும் அவ்வோசை
காதோடு ஒட்டுதடி

இன்னும் எத்தனையோ
உனை நோக்கி எனை ஈர்க்க
சொல்லில் முடிவதில்லை
என்றே தான் மனம் உணர
ஒத்த சொல்லுக்குள்
எல்லாமே உள்ளடக்கி
பெண்ணே உன்னிடத்தில்
என் காதல் சொன்னேனே❤️

இப்படியும் ஒரு நிலையோ
வந்ததவள் திருமணத்தில்
எப்படியும் அது நிற்காதோ
என்றும் ஒரு எண்ணத்தில்
காத்திருந்தேன் கழுகெனவே
நானும் அந்த மண்டபத்தில்

முகூர்த்த நேரம் வந்து
முடிச்சு போட்டு திருமணமும்
முடிந்திடவே என் கண்ணும்
ஏக்கத்துடன் நீர் வடிக்க
வந்ததுக்கு மிச்சமென
பந்தியிலே நான் நுழைஞ்சு
வாசமுள்ள பிரியாணி
வசமா ஒரு பிடி பிடிச்சு
வெளியில் வந்து வயிரோடு
மனசும் ஒண்ணா சேர்த்து
எல்லாம் பெற்று நீ
இன்பமுடன் வாழு என்று
வாழ்த்திவிட்டு வீடு வந்தேன் 😔
intha post sutathu ila en manasai thottathu..... bean