Author Topic: பெயரில்லா கிறுக்கல்  (Read 618 times)

Offline Mr.BeaN

பெயரில்லா கிறுக்கல்
« on: August 10, 2024, 03:48:44 PM »
எத்தனை இன்னல்
எத்தனை துன்பம்
அத்தனை கடந்தே
இத்தளம் வந்தேன்

சத்தியம் பேசும்
உத்தமனாக
சரித்திரம் படைத்திட
கனவும் கொண்டேன்

வித்தகன் போலே
என் குரல் வீசி
எத்தனை இதயம்
இங்கே கவர்ந்தேன்

அத்தனை பேரின்
இதயம் அதிலே
அன்பெனும் வழியில்
அடைக்கலம் புகுந்தேன்

மத்தளம் போல
பலரிடம் அடியும்
வாங்கிய பின்னும்
குணமது மாறேன்

மனமது மகிழும்
மனநிலையோடு
என் பனி இங்கே
என்றும் செய்வேன்
intha post sutathu ila en manasai thottathu..... bean