Author Topic: உன்னால் நான் 1  (Read 928 times)

Online Mr.BeaN

  • Full Member
  • *
  • Posts: 247
  • Total likes: 787
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நான் நானே நிகர் ஏதுமில்லை..
உன்னால் நான் 1
« on: August 10, 2024, 03:45:21 PM »

தரி கெட்டு ஒடும் மான் தலையை
குறி வைத்து சுட்டு வீழ்த்துதல்
போலே
திரை கட்டி தனிமையாய் வாழ்ந்த
எந்தன்
குறை சுட்டி பேசிட அவளும் வந்தால்

சுட்டதும் மானோ வீழ்ந்ததுவே அஃதே
அவள் சொற்களில் நானும்
வீழ்ந்து விட்டேன்

அவள் சுட்டும் குறையை கலைத்து பின்னர்
மனம் விட்டு பேச முயன்ற போதோ
மதி கெட்டு பொய் தான் நானும் போக
எனை விட்டு அவளும் நீங்கி சென்றால்

அவள் போனதால் நான் கலங்க மாட்டேன்
ஏன் என் இங்கு எவரும் கேட்டால்


நொடி நேரம் நிச்சயமில்லை வாழ்வில்
அவள் நினைவின் எச்சங்களுடன் வாழ்வேன்❤️❤️
intha post sutathu ila en manasai thottathu..... bean