Author Topic: அழைப்பின் மகிழ்வில்  (Read 900 times)

Offline Mr.BeaN

அழைப்பின் மகிழ்வில்
« on: August 10, 2024, 03:41:24 PM »
அரட்டை அறை
என் ஆரம்ப காலம்
ஓடுமீன் விட்டு உறுமீனுக்கே
காத்திருந்த கொக்கெனவே
எதிர்பார்த்திருந்தேன் தோழமைக்கே
என்னையும் ஒரு விரல்
சுட்டாதா எனும் ஏக்கத்துடன்...
ஏங்கி கிடந்த நாட்கள் அதிகம்
அப்படி தவித்திருந்த அந்நாட்கள்
எத்தனை வலிகளை என்னுள்
விதைத்திருக்கும் என நானே அறிவேன்
இப்படி யாரும் இனி எண்ணிவிட வேண்டாம்
என நானே வருவோரை எல்லாம்
வாயாற அழைத்து வரவேற்கிறேன்
இதைக்காணும் சிலரோ
என்னை பைத்தியமா என் எண்ணிவிட
இப்பொழுதும் சொல்கிறேன்
அறியாத ஒருவரை பேச அழைப்பது
பைத்தியம் அல்ல
அவதியோடு நம்மை நாடி வருபவருக்கு
நாம் தரும் வைத்தியம்❤️❤️

பைத்தியம் என எண்ணினால் கூட
என் வைத்தியம் இங்கே என்றும் தொடரும்😎
intha post sutathu ila en manasai thottathu..... bean