Author Topic: இசையும் இதய துடிப்பும்  (Read 695 times)

Offline Mr.BeaN


அடர்ந்த இருள் பரவி
ஆழ்மனது அமைதி கொள்ள
தளர்ந்த மனதோடு
தவித்திருக்கும் தனிமையிலே
கலைந்த நினைவுகளை
கவலையோடு அசைபோட்டு
மிகுந்த அயற்ச்சியுடன்
மெல்ல நான் கண் அயர்ந்தேன்.
அங்கே ஒரு நிசப்தம்
எங்கெங்கும் பரவுகிற
நேரமென் இதயம் லப்டப் சப்தமிட
இசையாய் புது விசையாய்
எனக்கும் அது தோன்றிடவே
எந்தன் இதயமுமே
அமைதியிலே ஆழ்ந்திடுதே
intha post sutathu ila en manasai thottathu..... bean