சிறு குச்சி எனினும்
தீ குச்சி ஒன்று
அகம்பாவம் கொண்ட
பெருங்காட்டை கண்டு
போராடி பார்த்த
கதை ஒன்று உண்டு
அக்காடும் அழிய
அக்குச்சி மட்டும்
எக்கேடும் இன்றி
எப்படித்தான் பிழைக்கும்
எனும் நீதி வழியே
எல்லோரும் இங்கு
பிரிவினை என்றும்
தீர்வில்லை என்று
உணர்ந்தாலே போதும்
அது போல இன்று
உலகிற்கு பெரிதாய்
வேறேது நன்று
மதம் இனம் மொழியாய்
கூறுகள் கொண்டு
மானுடம் இங்கே
வீழ்வதைக் கண்டு
மன வலியுடனே
சொல்வது யாதெனில்
மயிரினும் இழிவது
பிரிவினை அன்றோ..
அன்பாக பேசி
அயலாரை நேசி
வம்பினால் ஒன்றும்
பலனில்லை யோசி
(மன்னிக்கவும் இங்கே என்னால் தவிர்க்க முடியாமல் மயிர் என்னும் சொல்லை பயன்படுத்தி விட்டேன். என் மன வலி கூற அதை விட உகந்த வார்த்தை ஏதும் இல்லை.எனவே தோழர்கள் தயவுடன் என்னை மன்னிக்கவும்)