Author Topic: அவனின் அவள் 💜  (Read 577 times)

Offline Tee_Jy

அவனின் அவள் 💜
« on: June 27, 2024, 10:58:57 AM »
ஆம், அவள் கோபக்காரி தான்...!

கோபமாய் கொதித்த பின்னும், அவள் அனைப்பதும் என்னைத்தான்,
சரமாரியாய் திட்டித் தீர்த்த பின்னும்,
அவள் சாய்ந்தாடு வதும் என்மேல் தான்...!

திமிராய் நடந்து கொண்டாலும்,
தித்திக்க சிரிப்பதும் என்னிடம் தான்...!

கோபமானாலும், மகிழ்ச்சியானாலும்,
அழுகையானாலும், கவலையானாலும், சங்கடமானாலும், களிப்பானாலும்,
அவள் தேடுவது என்னைத்தான்...!