Author Topic: நிலவு பாடுமோ?  (Read 921 times)

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1217
  • Total likes: 4124
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
நிலவு பாடுமோ?
« on: June 15, 2024, 04:55:58 PM »


நிலவு பாடுமோ?

என் வாழ்க்கையில்
பல இரவுகள்
மொட்டைமாடியில்
நிலவை பார்த்து படுத்திருக்க
வானொலியில் ஒலிக்கும்  இவரின்  குரல்
நான் நிலவு பாடுவதாய் தான்
உணர்ந்தேன்

MS விஸ்வநாதன் அவர்களின்
இசையில் துவங்கி
இளையராஜா வின்
இசையில்
மயக்கி 
ஆர் ரஹ்மான் இசையில்
வியந்து
அனிருத் இசைவரை
நம்மை இவர் வசம்
வசியம் செய்து வைத்த குரல்

என்னை அவரின்
பாடல்கள் மயக்கியது  போலவே
மயக்கியது
அவரின் குணமும்

அவரில் குறை கண்டவர்
யாரையும் நான் கண்டிலேன்

16 மொழிகள்
40000+ பாடல்கள்
மலைக்கும் சாதனைக்கு
சொந்தக்காரர்
புகழின் உச்சாணி கொம்பில்
இருந்தும்
கர்வம் கடுகளவும்
வெளிப்படுத்தியதில்லை

இவரின் பாட்டு இருக்கும்வரை
காற்று என்றும் சொல்லும்
பாடும் நிலவே 
பாலு

MISS YOU SPB


****Joker****

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "