Author Topic: காதலித்து வாழ் !  (Read 854 times)

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1221
  • Total likes: 4137
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
காதலித்து வாழ் !
« on: December 27, 2023, 08:06:11 PM »
கண்ணை நிரப்பும்
கண்ணீரை போல
என் நினைவு கிடங்கை
நிரப்பும்
உன் நினைவுகள்

மறக்கமுடியாத
மரித்தாலும்
அழியாத
குளிர்காலமாகவும்
கோடை காலமாகவும்
என் இதயத்தில்
உன் நினைவுகள்

இழந்த
காதலுக்கு
என்றும்
விலை பேசாதீர்கள்
வெறுப்பு சாயமும்
பூசாதீர்கள்

அன்பு
ஓர் அப்பாவி
தன்னலமற்றது
நேசிக்க மட்டும் தான்
தெரியும் அதற்க்கு

தேடி தேடி
அலுத்துப்போகாத
கடல் அலை போல
தேடுங்கள்
உங்கள் மனதிற்கு பிடித்த
அன்பானவரை
காணும் வரை

கண்டும் ,
பிரிய நேர்ந்தால்
இனிக்கும்
அவ் நினைவுகளில்
வாழ பழகிக்கொள்ளுங்கள்

ஒரு புன்னகை
வாழ்நாள் முழுவதும்
மகிழ்ச்சியைத் தரும்
என்பதை எனக்குக்
கற்றுக் கொடுத்தது
நீ

காதலித்து வாழ்


***Joker***

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "