Author Topic: பிரிவு  (Read 1009 times)

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1223
  • Total likes: 4146
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
பிரிவு
« on: December 18, 2023, 06:00:31 PM »
கரையில் அமர்ந்து
சிறு கற்களை
ஆற்றை நோக்கி
வீசுபவனுக்கும்
ஆற்றுக்கும் 
என்ன கிடைத்திருக்கும்
மகிழ்ச்சியா?

அப்படி தான்
இந்த மன்றத்தில்
என் எண்ண குமுறல்களை
எழுத்துக்களாய்
பகிர்கிறேன்
வாசிப்பவருக்கு என்ன
மகிழ்வை தந்து விட போகிறது ?

மறந்து போனவர்களுக்கு
தெரியாது
நினைவுக்கு வந்தவர்கள் தரும்
வலி

மனித மனங்களுக்கு
இடையிலான
காதல் உறவுகள்
வயதுக்கு ஏற்ப வலுவடையும்
மதுவைப் போல
இருத்தல் நலம்

பூமியில்
யாரேனும் என் இதயத்தை
அன்பால் நிரப்ப முடியும் என்றால்,
என் கண்களை வலியால்
நிரப்ப முடியும்,
அது
நீ மட்டுமே.

ஒரு வார்த்தையால்
பிரிந்தபோது
தொலைந்த கனவுகளும்
ஏராளம்.

சதா சர்வகாலமும்
பிள்ளையை திட்டிக்கொண்டிருக்கும்
தாய்
ஒரு சில மணி நேர பிரிவை கூட
தாங்க முடியாமல் தவிப்பாள்

சில நேரம்
சிறு பிரிவு
நல்லது

அப்படி நல்லதாய்
இருக்கட்டுமே
இப்பிரிவும்

நன்றி வணக்கம்

***Joker*** 

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline Vethanisha

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1443
  • Total likes: 3053
  • Karma: +0/-0
  • Silence says so much♥️ Just listen
Re: பிரிவு
« Reply #1 on: December 19, 2023, 08:49:48 AM »
Sila nera sila pirivu nallathu..


100il oru vaarthai..

Arumayane pathivu...