Author Topic: புது விடியல்  (Read 652 times)

Offline Mr.BeaN

புது விடியல்
« on: November 16, 2023, 07:36:06 AM »
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வுமாம்..
அப்படித்தான் என் பகலை இருள் கவ்வியது ,
எப்படியும் தர்மம் வெல்லும் எனும் நம்பிக்கை எனக்குள் இருக்க!!
புது விடியலுக்காக கண்ணயர்ந்து
காத்திருந்தேன்,
உறங்கி கொண்டிருந்த பறவைகள்
எல்லாம்..
விடியல் வர போவதை உணர்ந்து
உற்சாகத்தில் கீச்சிட ,
என் காதுகளில் இன்னிசையாய்
அவ்வொலி இனிக்க,
கண்களை திறந்து காட்சிகளை கண்டேன்.
நெடு நேரம் இருளை
கடந்து கதிரவன் !!
தன் கதிரை பூமியின் மீது செலுத்த..
அரும்பிய மொட்டொன்று அழகாய் மலர்வதை போல !
இருளை நீக்கி வெளிச்சம் உட்புக ..
எனது காலை இனிதாய் பிறந்தது!!!

இன்றைய பொழுது நமக்கு என்ன தர போகிறது என்பதை யாரும் அறியோம்.
ஆனாலும் நம்பிக்கையோடு நம் பொழுதை தொடங்கி கடப்போம்.
எல்லா நாளும், உயிர் வாழும் ஒவ்வொரு உயிர்க்கும் நந்நாளே.

அனைவருக்கும் இனிய காலை வணக்கத்துடன் இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துகள்..

அன்புடன் திருவாளர் பீன்
intha post sutathu ila en manasai thottathu..... bean