நீக்கமற நிறைந்து
நெடுந்தூரம் கடந்து
பார்க்கும் எல்லாம் படர்ந்து
பறவை போல பறந்து
ஏக்கமுறும் மக்கள்
உயிர் மூச்சாய் நின்று
தேக்குகிற எல்லாம்
தவிடு பொடி ஆக்கி
தாக்குகிற போதே
தன்னுள் அடக்கி
போகின்ற பாதை
போக்கிடமே என்று
வான் வரை உயர்ந்து
வையத்துள் நிறைந்து
மறையாய் மறைவாய்
ஒளியாய் ஒலியாய்
எல்லாம் என நீ
இங்கே கலந்தாய்
எல்லா உயிர்க்கும்
உயிராய் இருந்தாய்!!
அன்புடன் திருவாளர் பீன்