நீளமான நெத்தி உண்டு
நெத்தியில பொட்டும் உண்டு
உன் முகத்தை நானும் கண்டு
மோகம் கொண்ட நாட்கள் உண்டு
கல்கண்டு குரலை கொண்டு
கானம் போல நீ பேச
நந்தி போல அசையாம
நானும் நின்ன காலம் உண்டு
பச்சை கிளி மூக்காக
கோவமா நீ செவக்க
பதுங்கி நான் இருந்த
நாட்களும் நெஞ்சில் உண்டு
எல்லாமே நொடி பொழுதில்
மாறியும் போனதடி
நீ போன பின் நெஞ்சில்
தாக்குதடி விஷ வண்டு..