Author Topic: வேண்டும் நீ 2  (Read 807 times)

Offline Mr.BeaN

வேண்டும் நீ 2
« on: November 10, 2023, 01:47:46 PM »
பொண்ணு ஒன்னு நான் பாத்து
ஆசையோடு பேசையில

என்னோடு பேசித்தான் அவளுக்குமே அலுத்துறுச்சு

மனசு விட்டு பேசுனவ
மதிக்காம போகையிலே

வலி தாங்க முடியாம
என் மனசும் தான் வெடிச்சிருச்சு

பச்ச புள்ள தொட்டிலிலே
கண்ணயர்ந்து தூங்கையிலே

கிள்ளி விட்டு தொட்டிலையும்
ஆட்டுகிற கத போல

என் கூட இருந்துபுட்டு என்ன
விட்டு அவ போக

மனசும் தான் ஆராம
அழுககிறத என்ன சொல்ல

உன்ன போல வேறொருத்தி
உலகத்திலே இருந்தாலும்

எம்மனசு புரிஞ்சவ நீ
உன்ன போல யாருமில்லை


காதலுடன் திருவாளர் பீன்
intha post sutathu ila en manasai thottathu..... bean