Author Topic: ❤️❤️❤️ தோற்றேன் ❤️❤️❤️  (Read 770 times)

Offline VenMaThI

❤️❤️❤️ தோற்றேன் ❤️❤️❤️
« on: November 05, 2023, 07:22:55 PM »


தோற்றேன்

கண்டதும் காதல் கொண்டேனோ தெரியவில்லை
ஆனால்
கண்டதும் உன்னிடம் தோற்றது என் மனம்..

அழகை அன்பு வெல்லுமோ தெரியவில்லை
ஆனால்
உன் அன்பிடம் தோற்றது என் சினம்...

எவர் சொல்லியும் மாறுமோ தெரியவில்லை
ஆனால்
உன் அரவணைப்பால் தோற்றது என் குணம்...

மாடமாளிகையில் சிரிப்பொலி கேட்குமோ தெரியவில்லை
ஆனால்
என் மகிழ்ச்சியிடம் தோற்றது அந்த பணம்...

எல்லாம் தோற்றுப் போகையில் எது வென்றதோ தெரியவில்லை
ஆனால்
உன் காதலிடம் தோற்றேன் நானும்

❤️❤️❤️❤️.....