துன்பங்களை தன்னுள் புதைத்து
அன்பினை உலகில் விதைத்து
மடியில் தவழும் மகளாய்
மாராப்பை விரிக்கும் மனைவியாய்
மார்பிலே பாலூட்டும் தாயாய்
எத்தனை அவதாரம் எடுத்தாலும்
மாறாத குணமுண்டு பெண்ணில்!!
அத்துணை அறிதான குணத்தின்
பெயர்தான் உலகில் மென்மை..!!
பெண்மையை போற்றுவோம்!!
மென்மையாய் ஏந்துவோம்!!
அன்புடன் திருவாளர் பீன்