பொது மன்றம்.தனிலே
கவிதைகளை எழுதி
பொழுதுகளை நானும்
கழித்திருந்தேன்..
பொறுமையுடன் யாவும்
படித்து விட்டு நீயும்
பதிலிடையில் நானோ
மெய் சிலிர்த்தேன்..
கனவுகளை கூட
காணாத எந்தன்
கண்களும் உன்னைத்தான்
தேடுதே.
உன்னுடனே பேசி பல
பொழுதை கழிக்க
எனக்கும் ஆவல் தான்
கூடுதே
கனவுகளும் தோன்றா
என் கண்களில்
உனதுருவம் தோன்ற
நான் ஏங்கினேன்..
உனதன்பை நானும்
என் கவிதை கொண்டு
எந்நாளும் இங்கே
நான் தாங்குவேன்..
ரசனையுடன் என்னை ரசித்தவளும்
நீயே
அன்புடனே வார்த்தை உதித்தவளும்
நீயே
உன்னுடைய ரசனை எனக்கிங்கு
வேண்டும்
உனதன்பை பெறவே எழுதுவேன்
மீண்டும் ... மீண்டும்....