Author Topic: ஆனந்தம்..  (Read 957 times)

Offline Mr.BeaN

  • Full Member
  • *
  • Posts: 247
  • Total likes: 787
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நான் நானே நிகர் ஏதுமில்லை..
ஆனந்தம்..
« on: October 31, 2023, 06:35:07 AM »
வாரத்தில் ஆறு நாளு அசராம
உழச்சிப்புட்டு
ஞாயித்து கிழமயிலே நானும்தான்
வீடு வந்தேன்
எத்தனையோ களைப்புகள் எனக்குள்ள இருந்தாலும்
என் மகளை அழச்சிக்கிட்டு வெளியில நான் போனேனே..
இருசக்கர வண்டியில முன்னாடி aஏத்திக்கிட்டு
அவ பேசும் பேச்செல்லாம் மறுக்காம
கேட்டேனே
என்னோட இளவரசி அவளத்தான்
கூட்டிகிட்டு
நகர்வலமா நினைச்சுக்கிட்டு நானும் தான் போனேனே..
அவ கேட்ட எல்லாமே வாங்கி தர
என்னால
முடியாது என்றாலும் முகம் சுளிக்க
மாட்டாலே.

சித்தம் கலங்கி நானே சில நேரம்
இருக்கயிலே
முத்தம் ஒன்னு தந்து மொத்தமுமே
மாத்திடுவா
வாழ்க்கையில ஆனந்தம் இதுதானா
எனக்கேட்டா
ஆனந்தம் இது இல்ல பேரானந்தம்
என்பேனே..


அன்புடன் திருவாளர் பீன்

என் மகள் ரியானா உடன் நான் செலவிட்ட நேரம் என்னுடைய ஆனந்தம் இந்த கவிதை
« Last Edit: November 02, 2023, 10:31:02 AM by Mr.BeaN »
intha post sutathu ila en manasai thottathu..... bean

Offline Ishaa

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1328
  • Total likes: 2805
  • Karma: +0/-2
  • Gender: Female
  • Faber est suae quisque fortunae
Re: ஆனந்தம்..
« Reply #1 on: October 31, 2023, 10:50:04 AM »
ஆனந்தம் இது இல்ல பேரானந்தம்
என்பேனே.


பெண்பிள்ளைகளை இளவரசியாக வழக்கும் ஒவ்வொரு தந்தையும் இவுலகில் ராஜா தான்

பெண்கள் வைக்கும் அன்பில் ஏமாற்றத்தை அளிக்காத ஒரே ஆண் தன் தந்தை மட்டுமே.

மிக அழகிய கவிதை திருவாளர் பீன் 👍

Offline Mr.BeaN

  • Full Member
  • *
  • Posts: 247
  • Total likes: 787
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நான் நானே நிகர் ஏதுமில்லை..
Re: ஆனந்தம்..
« Reply #2 on: October 31, 2023, 11:02:39 AM »
மிக்க நன்றி..
intha post sutathu ila en manasai thottathu..... bean