காற்று மேனியில் கூசும்பொதும்!
காயும் நிலஒளி வீசும் போதும்!
மேகம் மழையினை பொழியும்போதும்!
இரவில் கதிரவன் மறையும்போதும்
நதியின் நீரிணை பருகும்போதும்!
வெயிலில் பனித்துளி உருகும்போதும்!
அழகாய் குயில்களும் கூவும்பொதும்!
அன்னை தமிழ் மனம் நீவும்போதும்!
இயற்கை நம்மிலே காதல் விதைக்கும்!
கவிதை போலவே நம்மில் கதைக்கும்!
அஃது போலவே நாமும் மாறி..
அனைவரிடத்திலும் காதல் விதைப்போம்..!!!
காதலை விதைப்போம்..
கவிதைகள் வளர்ப்போம்..
அன்புடன் திருவாளர் பீன்..