Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 320  (Read 3079 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 320

இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


Offline சாக்ரடீஸ்


புத்தகங்கள்
அறிவின் களஞ்சியம் !
என்றுமே
புத்தகங்கள் மீது
ஆழமான அன்பும்
ஆழ்நிலை செயல்பாடும் உண்டு
படிப்பது !
தெரிந்து கொள்வது !
தெளிவு பெறுவது !

பேனா போர்வாள் என்றால்
புத்தகம் ஒரு போர்க்களம் !

புத்தகங்கள் என்றால் அத்தனை மதிப்பு
அதன் வடிவங்கள் மாறலாம்
ஆடியோ புக்ஸ், ஈ-புக்ஸ் என
ஆனால் புத்தகத்தில் இருக்கும் 
அறிதலும் அறிவும் என்றும் மாறாது !

புத்தகம் படிப்பது மட்டும் அழகு இல்லை
புத்தகம் அடுக்கி வைத்து இருக்கும்
அலமாரி கூட அழகியல் தான் !

புத்தகங்கள்
சிலருக்கு மட்டுமே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்
சிந்தனை மாறுபடும்
பேச்சுகள் மாறுபடும்
ஏன் நடைமுறை வாழ்க்கையின்
அணுகுமுறைகூட மாறுபடும்
வாழ்க்கையை புரட்டிபோடும் வலிமை
புத்தகத்தின் வரிகளுக்கு உண்டு !

புத்தகம் தரும் அனுபவம் அலாதியானது
நம்மை சுற்றி காட்சிகள் ஓடும்
நாமும் அந்த காட்சிகளுடன் உலா வருவோம்
நம் குரல் பண்பேற்றமடையும்
கதாபாத்திரங்களிடம் உரையாடல் நடக்கும்
குடிசையில் வாழ்வோம்
அடர்ந்த காட்டில் பயணிப்போம்
போர்க்களத்தில் போர் புரிவோம்
ஏன் விண்வெளில் கூட பறப்போம்
புத்தகத்தின் வரிகளின் தாக்கம் அளப்பரியது !

சிலருக்கு பெரும் படைப்புகளை
வாசிப்பதில் ஆர்வம் குறைவு
சொற்கள் அதிகம், வரிகள் அதிகம்
என்று படைப்புகளை
ஒதுக்கும் மனிதர்களுக்கு
பொன்னியின் செல்வன்
அருமை புரியாது !

போதி மரத்தின் அடியில்
இருந்தால்
அவன் புத்தன்
நல்ல புத்தகத்தின் மடியில்
இருந்தால்
அவன் உக்கிரபுத்தன் !

« Last Edit: September 11, 2023, 08:35:34 PM by சாக்ரடீஸ் »

Offline Sun FloweR

சாளரம் திறந்தால் மென்காற்று வீசும்..
ஏட்டினைத் திறந்தால் அறிவு வளரும்..

அருவியில் நனைந்தால் இன்பம் பெருகும்..
நூல்களுள் நீ நுழைந்தால்
அந்த வானமே வசப்படும்..

புத்தகங்கள் வெறும் புத்தகங்கள் அல்ல..
அவை வாழ்க்கையின் வழிகாட்டி..
துயர பெருங்குழியில் வீழாது காப்பாற்றும் கயிறு..
ஒழுக்கத்தை புகட்டி வெற்றிநடை போட வைக்கும் ஆசான்..
இருள்மிக்க வாழ்வில் நம்மை பாதுகாக்கும் அகல்விளக்கு ..

நல்ல நூல்களை நீ கற்றால்
இன்ப வாழ்வு உனை கற்கும் ..
அறிவு ஏடுகளை நீ புரட்டினால்
உலகையே நீ புரட்டி போடலாம்..

நூல்களை நேசிக்கும் இதயமே
மனிதர்களை நேசிக்கும்..
ஏடுகளின் நிழலில் இளைப்பாறும் உள்ளமே
வெற்றி வாகையை எட்டி பிடிக்கும்..

இளமையில் கற்றல் என்பதே
பிள்ளைகளின் பரிணாம காலம் ..
பசுமரத்தாணியாய் உள்ளத்தில் உள் வாங்கும் காலம்..
ஆதலால்
பிள்ளைப்பருவத்திலே கல் ..
குழந்தைப் பருவத்திலே வெல்..

Offline ShaLu

பெண்ணவள் தன்வாழ்வை பெருமையுடன் வாழ
பெண்கல்வி மிக அவசியம்..!!!

பெண்ணே..!!
வறுமையைத் தவிர்க்கவும்
பெண்சுதந்திரம் பெறவும்
உனை தடுக்கும் சக்தியை
எதிர்த்துப் போராடும்
உத்வேகம் பெறவும்
உனக்கு எதிரான வன்முறையை அடக்கி ஆளவும்
ஆணாதிக்கத்தைத் துணிந்து சமாளிக்கவும்
உன்னை முன்னேற விடாமல் தடுக்கும்
அனைத்து தடைகளையும் தகர்க்கவும்
உனக்கு கல்வி  மிக அவசியம்...

உன்னையே நீ  நம்பும் தன்னம்பிக்கையை பெறவும்
பல நூற்றாண்டுகளாய் மனிதர் மனதில் மண்டியிட்டுள்ள
மாதவர் பற்றிய மட்டமான எண்ணத்தை அகற்றவும்
உன் கல்வி மிக அவசியம்...

நன்மை எது தீமை எது
சரி எது தவறு எது என்பதை
அறிந்து ஆராயவும்
அனைத்து துறையிலும்
ஆற்றல் மிக்கவளாய் ஆகிடவும்
பெண்களை ஆச்சர்யமாய் அதிசயமாய் பார்க்கும்
அகிலத்தை உருவாக்கவும்
உன் கல்வி மிக அவசியம்..

உன் வளர்ச்சிக்கும் நலனுக்கும் முக்கிய காரணியாக இருப்பது  கல்வியே
பொருளாதாரம், கல்வி, சமூகம், அரசியல் மற்றும் சட்டம் இவை அனைத்திலும் ஆணுக்கு பெண் சலைத்தவள் இல்லை
என்பதை அனைவரும் உணர
உன் கல்வி மிக அவசியம்..

காலம் முடியும் வரை கூடவே வருவது
கல்விதானே அன்றி
அன்னை சேர்த்து வைத்த பந்தமோ
அப்பா  சேர்த்து வைத்த பணமோ அல்ல
உன்னை ஒடுக்க ஓர் கூட்டமே
ஓயாமல் போராடி கொண்டிருக்க
அவர்களை ஓட வைக்கும் ஆற்றல் பெற
உன் கல்வி மிக அவசியம்

ஆண்களும் பெண்களும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களாய்
பாவிக்கப் படாமல்
நாட்டின் வளர்ச்சிக்கு
இருவருக்குமே சம வாய்ப்பு
அளிக்காமல்
ஆண்களை மட்டுமே முன்னிறுத்துவதை தடுக்க பெண்ணே
உன் கல்வி மிக அவசியம்..

பெண்களுக்கு
உலகை பற்றிய புரிதலும்அவர்கள்
உரிமை பற்றிய புரிதலும் வேண்டும்
பெண்கல்வி என்பது
வீட்டை மேம்படுத்துவதற்காக
மட்டுமல்ல,  இந்நாட்டை
மேம்படுத்துவதர்காகவும்

பெண்கல்வியை எதிர்க்கும் தீயசக்திகளே..
அவள் கல்வி கற்க ஆதரவளியுங்கள்
அவள் தருவாள் உங்களுக்கோர்
அறிவிற்சிறந்த அழகான பெண்
சமூகத்தை..!!!

பெண்ணே..
கல்வியே இச்சமுதாயத்தை எதிர்கொள்ளக்கூடிய
'உன் சிறப்பான எதிர்காலத்தின் வாசல்'
இதை நெஞ்சில் நிறுத்தி
பாரதி கண்ட புதுமை பெண்ணாய்
உன் வாழ்வை வளப்படுத்து..!!!
« Last Edit: September 12, 2023, 01:08:08 PM by ShaLu »

Offline VenMaThI



புத்தகமே

நடந்தேறிய கதைகளுக்கும்
நிகழ்ந்திடா பல கற்பனைகளுக்கும்
கவிச்சிற்பிகளின் படைப்புகளுக்கும்
கல்வியின் அச்சாணியாகவும்
அச்சிடப்பட்ட அடிக்கல் நீ ..


நீ ஆண்பாலா பெண்பாலா என அறியேன்
நீ அறிந்த மொழிகளும் நான் அறியேன்
நீ அறியாத மொழியென்று ஒன்றிருப்பின்
அது மௌனமொழி மட்டுமே என்று எண்ணுகிறேன் ...

உருகிய மெழுகோ பல இருட்டை நீக்கி இருக்கும்
தேய்ந்த காலணியோ பல பயணங்கள் கண்டிருக்கும்
புரட்டி புரட்டி சிதைந்த புத்தகமோ
பலர் வாழ்க்கைக்கு வழி காட்டி இருக்கும் ...

.படிக்கட்டாய் விளங்கும் உன் எல்லையையும் கண்டதில்லை
பயணித்தவர் என்றும் சறுக்கி விழவும் கண்டதில்லை ..
புத்தகங்கள் புரட்டப்படுமாயின்
பலரின் வாழ்க்கையும் புரட்டப்படுகிறது..

முகவுரை முதல் முடிவுரை வரை
பயணிக்கும் ஓர் உன்னத பயணம்
மீண்டும் மீண்டும் பயணிக்க நினைத்தும்
முடிவுரை இல்லா புத்தகமாய் நம் வாழ்கை மட்டுமே ...

காட்சிகளுக்கும் கதைகளுக்கும்
நிஜங்களுக்கும் நினைவுகளுக்கும்
வரலாற்றுக்கும் வரும் காலத்திற்கும்
முடிவுரை தந்த நீ
வாழ்க்கை பயணத்தின் முடிவுரை கூற மறந்ததேனோ

கிறுக்கி கிறுக்கி தீர்ந்து போன மை தான் காரணமோ ...இல்லை
என்னை படைத்த இறைவன் அருள மறுத்த பக்கமாய் போனதோ ....இல்லை
அது தெரிந்தால் என் வாழ்வின் ஸ்வாரஸ்யம் கெட்டுவிடும் என்று கிழித்தெரிந்தாயோ ..
காரணம் எதுவாகிலும்
அந்த பக்கத்திற்காய் என்றும் ஏங்கும்
உன் விசிறியாய் நான் ........

Offline JenifeR

புத்தகம்


என் முதல் காதலா
என்ன யோசிக்கிறாய்?
உன்னைத்தானடா "புத்தகா "
உனக்கே தெரியாமல் உனக்கு நான் வைத்த செல்லப் பெயர்

உன் மீது காதல் வந்த முதல் தருணம்
ரயில் பெட்டியின் ஜன்னலோர இருக்கை
சில்லென்ற காற்றை  உணர்ந்தது என் தேகம்
உன்னை உணர்ந்தது  என் இதயம்
உருமாற்றம்  ..... metamorphosis by Franz Kafka
என்னுள் ஏற்படுத்தியது  மனமாற்றம்

அந்த ஒரு நாள் வாழ்வின் மறக்க முடியாத பயணம்
விழி வழியாக ரசித்து
இதயத்தில் கலந்தாய் என் உயிர் மூச்சாக
நீ காகிதம் அல்ல என் ஆயுதம் என அறிந்தேன்
ஒவ்வொரு பயணமும் அழகானது
உன்னை தானடா என் காதலா
முட்டாள்களையும் அறிவாளி ஆக்கியது உன் அன்பு

எந்த மருத்துவருக்கும் தெரியவில்லை
நீயே  நோய் தீர்க்கும் மருந்து என்று
என் தனிமையை இனிமையாக்கினாய்
என் வாழ்வின் விடை இல்லா கேள்விகளுக்கு விடையானாய்

கறை படிந்த சாக்கடையை
தெளிந்த நீரோடையாக்கினாய்
கோடானகோடி சிற்பிகளின் குழந்தையாய் நீ

குர்ஆன் பைபிள் பகவத் கீதை

எங்களது கைகளில் தெய்வக் குழந்தையாய்
நீ தவழும் அழகு எதற்கும் ஈடாகாது
எத்தனை அழகு பெயரடா உனக்கு

உன் ஒவ்வொரு பக்கமும் என்  ஒரு நொடி
இதய துடிப்பாய் என் இதயத்தின்
அங்கமாய் நீ மாறினாய்

என்னை அழகாக மாற்றியது
உன் உடை அல்ல
உனது நடை

என் வாழ்க்கையும் அழகானது
நான் உன்னுள் நுழைந்ததால் அல்ல
நீ என் இதயத்தில் நுழைந்ததால்
உன் மீது என் காதல், என் மூச்சு உள்ள வரை ....
« Last Edit: September 13, 2023, 03:36:29 AM by JenifeR »

Offline Ishaa

முடிவில்லா தேடல்

யாரிடம் கிடைக்காத அடைக்கலம்
எனக்கு உன்னிடம் கிடைத்தது.
உண்மை உலகில் இருந்து தப்பித்து
உன்னோடு பல கற்பனை உலகில் மூழ்கினேன்.
 
சில சமயங்களில்...
 
நிஜ உறவுகளை தவிர்த்து
உன்னில் உள்ளே பல கற்பனை உறவுகளோடு கதாபாத்திரதோது பயணித்தேன்,
அதை மிகவும் ரசித்தேன்.
சிறிய நேரத்தில் சுத்தி இருக்கும்
எல்லாத்தையும் மறந்தேன்.
 
கற்பனை உலகில் இருந்தாலும்
மிக மகிழ்ச்சி கொண்டேன்,
சிறிய நேரத்தையும் ரசித்தேன்.
என் உலகிலும்,
இதைப்போல் உறவுகள் கிடைக்காத என்று ஏங்கினேன்.
 
என் அறிவு உன் மூலம் வளர்த்தேன்.
என் வாழ்க்கைக்கு வழிகாட்டியாய் இருந்தாய்.
என் வாழ்க்கை இலக்கை மறவாதே என்று எச்சரித்தாய்.
அதை போல் என்னுள் உள்ள
கவலைகளையும் தவிப்பையும் உணர வைத்தாய்,
சில சமயம்.
 
இந்த மகிழ்ச்சி சோகமாய் மாறும் தருணம்,
உன்னில் இருக்கும் கடைசி பக்கத்தை வசித்து முடித்தால் .
ஒரு அழகிய பயணம் முடிந்து விட்ட்து என்று.
ஒவொரு பாடலில் இருக்கும் நினைவுகள்   போல்.
ஒவொரு புத்தகத்தில்,
ஒவ்வொரு பக்கங்களில்,
பல நினைவுகள் அமர்ந்து இருக்கும்.
 
என் தேடலுக்கு பதில் கிடைத்தது போல்
ஒவ்வொரு மனிதர்களின் தேடலுக்கு
கண்டிப்பா ஒரு புதக்கம்
எழுத பட்டு இருக்கும்.
அதை நீங்க தேடுனால் மட்டுமே
உங்களிடதே வந்து சேரும்.
« Last Edit: September 12, 2023, 09:32:32 AM by Ishaa »

Offline Mani KL

புத்தகம் உன்னை இந்த உலகுக்கு காட்டும் சித்திரம்

பள்ளி பருவத்தில் குழந்தைகள்  சுமப்பது
புத்தகம் அல்ல
குழந்தைகளின்  அறிவும் ஆற்றலையும்
சிந்தனையும் திறமையையும் வெளிகாட்டும்
பல ஏடுகளின் தொகுப்பை  சுமக்கிறார்கள்
 
வாய் பேசா  குழந்தையின்  திறமையை
பல காகிதத்தில்   பல சொற்க்களாய்  தொடுத்த அந்த தொகுப்பை
 பலரும் கண்டு  வியக்க வைத்து இந்த  வானுலகக்கு
அந்த குழந்தையின் திறமையை பேசவைக்கும்
அந்த குழந்தையின் கையில் உள்ள
பல காகிதத்தின் தொகுப்பான அந்த புத்தகம் (புக் ஒப் ரெகார்ட் )

குழந்தைகள் காணாத பல  மேதைகள்  பல ஞானிகள்
பல கவிஞர்கள்  பல சிற்பிகள் அவர்களின்
திறமை சிந்தனை ஆற்றல் அனைத்தையும்
அந்த பிஞ்சு மனதில் கொண்டு சென்று
அந்த பிஞ்சு குழந்தைகளை வருங்கால
ஞானிகளும்  மேதைகளும் ஆக  வழி வகுக்கும்
பல ஏடுகளின் தொகுப்பான  இந்த புத்தகம்


சிற்பியின் உளி நல்ல சிலையை  செதுக்கும்
புத்தகத்தில் உள்ள சொற்கள் நல்ல அறிவை செதுக்கும்

எழுதுகோளின் நண்பன் புத்தகம்
இணை பிரியா தோழர்கள்

எழுதுகோளுக்கு உயிர் கொடுத்து கொண்டே இருக்கும்
இந்த புத்தகம்
 
 பல மேதைககள் கிறுக்கிய தொகுப்புகள்
பலரின் வழக்கையை திருத்திய தீர்ப்புகள்

நல்ல புத்தகத்தை புரட்டி பார்
அது உன்
நல்ல வாழ்க்கை பயணத்தை புரட்டி போடும்

குழந்தைகளின் திறமையை வளர்க்கும்  புத்தகம்

பலரின் வழிகாட்டி புத்தகம்

« Last Edit: September 12, 2023, 03:36:46 PM by Mani KL »

Offline SweeTie


கற்றலுக்கு  வயதில்லை    வரையறை இல்லை 
அறிவுக்  கதவு    மூடுவதும்  இல்லை   
ஊக்கமும்  ஆற்றலும்   இருபவர்க்கெல்லாம் 
நித்தமும்   கிடைக்கும்  அறிவின்  ஊற்று

இளமையில்  கல்வி சிலையில் எழுத்து
இன்முகத்தோடு  கசடறக்  கற்போம் 
எண்ணும்  எழுத்தும்  கண்ணனென கொள்வோம்
பண்ணும்  பாடலும் கூடவே கற்போம்

அறிவுக்  கண்களைத்  திறந்திடும்   நூல்கள் 
அரசனும்  ஆண்டியும்  படித்திடும்   நூல்கள்
கல்லாதவனையும்   பொல்லாதவனையும் 
நல்வழிப்படுத்தும்  நன்னெறி  நூல்கள் 

வீரத்  தமிழர்கள்  சரித்திரம்  அறிவோம்
சங்கம்   வளர்த்த  தமிழும்   அறிவோம் 
பாரத நாட்டின்   பாரம்பரியம்  தெரிவோம்
பல்கலையும்   கற்று பண்டிதனும் ஆவோம்

\ஏட்டிலும் கல்வெட்டுகளிலும்   உருவான எழுத்துக்கள்
காலத்தின்  கெடுபிடியி ல் சிக்கி சின்னாபின்னமாகி
அச்சுகளால்  கோர்க்கப்பட்ட  எழுத்துக்களால்  நூலாகி
நம் கைகளிலே   தவழ்கிறது இன்று   

அறிவில் சிறந்த  அறிஞர்கள் உலகம் 
சென்ற இடமெல்லாம்   சிறப்புறும்   அவர்கள்
எழுதிய  நூல்கள்   
அறிவை  வளர்க்கும்  அற்புத  ஓளஷதம்
படிப்போம்   பயன்பெறுவோம்  நாமும்
 

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1030
  • Total likes: 3401
  • Total likes: 3401
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
எழுத்துலகின்
ஜாம்பவான்கள் அறிமுகமாகா வயதில்
நகைச்சுவை துணுக்கும்
கேலிச்சித்திரங்களும்
தலைப்பு செய்திகளும்
தமிழ் பயிலவும் 
நேரம் கடத்தவும் உதவின
நூலகங்கள் பரிச்சயமாயின

தமிழின் மேல் காதல் துளிர்விட்டது
சிறுக சிறுக
கல்கியாரும்,சாண்டில்யன் அவர்களும்
நம் வரலாற்றை கண்முன் நிறுத்த,
பாலகுமாரன் வாழ்வின் நிஜத்தை பிரதிபலிக்க,
சுஜாதாவோ கற்பனைகளின் வண்ணங்களை
தீட்டிக்கொண்டிருக்க ,சுபாவும், பட்டுகோட்டையாரும்
நமக்குள் ஒளிந்திருந்த துப்பறிவாளனை எழுப்ப
மெல்ல மெல்ல விரிந்தது
புத்தகத்தின் மீதான மோகம்

எத்தனை படங்கள் திரையில்
பார்த்திடினும் தராத
மகிழ்ச்சியையும் ஆனந்தத்தையும்
தந்தன ஒவ்வொரு புத்தகங்களும்

நிறைகுடம் தளும்பாது என்பது போல
எண்ணிலடங்கா புதையல்களை
தன்னகத்தே கொண்டு அமைதியாய்
இருக்கிறது
நூலகம்

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "