>யாரையும் நம்பக்கூடாது. உன்னை மட்டும் நம்பு.
>புகழ்ச்சிக்கு மயங்கக்கூடாது. அது நம்மை மயக்கி விடும்.
>தோல்வி ஏற்படும் போது விரக்தி அடையாமல் அது கற்று கொடுத்த பாடத்தை நினைவில் கொள்ள வேண்டும்.
>கடன் கொடுக்கவும் வேண்டாம் வாங்கவும் வேண்டாம். இரண்டுமே உறவை முறிக்கும்.
>முயற்சி ஒன்று மட்டும் தான் வெற்றி பாதையை தேடி தரும்.
>எது நடந்தாலும் அதில் உள்ள நன்மை மட்டுமே நினைவில் கொள்ள வேண்டும்.
>கற்ற கல்வி, கற்று கொண்ட தொழில் என்றுமே நமக்கு உதவும். வீண் போகாது.
>அறிவுரையை கூறுவதை விட பிறர் கூறும் அறிவுரையை கேட்டு அதன்படி நடக்க வேண்டும்.
>அபரிமிதமான உணர்ச்சிகள் கோபம், ஆத்திரம், பிடிவாதம், பொறாமை அடக்க வேண்டும். இல்லாவிட்டால் அது உன்னை அடக்கி விடும்.
>சில விஷயங்கள் பேசுவதை க்காட்டிலும் பேசாமல் மௌனமாக இருப்பதே சிறப்பு.
>எதையும் செய்கிறேன் என்று வாக்குறுதி தர வேண்டாம். செய்யும் செயலில் அதை காட்டுங்கள்.
>திட்டமிட்ட வாழ்வு வாழ வேண்டும். முடிவுகளை திறன்பட எடுக்க வேண்டும்.
>சோகம், மனஅழுத்தம் நேரும் போது எதையும் மனதில் போட்டு அடக்க வேண்டாம்.
>கிடைத்த வாழ்வை இனிமையாக வாழ வேண்டும். திருமண வாழ்க்கை மட்டும் இல்லை தொழில் மற்றும் வேலை எதுவானாலும் சரி.
>சரியானது என்று நினைத்து நீங்கள் முடிவு எடுத்த பின்பு எந்த தடை வந்தாலும் பின் வாங்கக்கூடாது. எதற்கும் பயப்படக்கூடாது, விமர்சனங்களுக்கு அஞ்சக்கூடாது.