Author Topic: காற்றினில் பறக்கும் பட்டங்கள்  (Read 1029 times)

Offline thamilan

வாழ்க்கை எனும் புயலில்
சிக்குண்ட மரம் போல
உதிர்ந்தது என் கனவுகள்

பலப்பல கனவுகளுடன்
விதவிதமான கற்பனைகளுடன்
தூக்கத்தை மறந்து
உணவை தவிர்ந்து
வெறியுடன் படித்து
பெற்ற பட்டங்களோ
காற்றினில் பறக்கும் பட்டங்களாக

பட்டத்துக்கு மதிப்பில்லை
ரொக்கத்துக்கே மதிப்பு
இந்தக் காலத்தில் ......
படித்தும் கிடைக்காத பதவி
பணத்தால் கிடைக்கிறது

தொழில் இல்லை பணம் இல்லை
தொலைந்து போனது
தூக்கமும் நிம்மதியும்
இல்லை என்று வந்துவிட்டால்
சொந்தமும் இல்லை
பந்தமும் இல்லை

சூறாவளியாகிவிட்டது என் வாழ்க்கை
இந்த பட்ட மரம் கூட
ஒரு நாள் தளிர்க்கும்
என் வாழ்க்கை தளிர்க்குமா
சொல் இறைவா சொல்

படித்த படிப்புக்கு பதவி கேட்டால்
அந்த பதவிக்கு
இத்தனை ரொக்கம் என
நிர்மாணிக்கிறார்கள்
பணம் தேடாத தானே பதவி
அந்தப் பதவிக்கே
பணம் கேட்டால் ??????