Author Topic: ❤️ பாசம் ❤️  (Read 1098 times)

Offline VenMaThI

  • FTC Team
  • Sr. Member
  • ***
  • Posts: 418
  • Total likes: 1943
  • Karma: +0/-0
  • Gender: Female
  • hi i am Just New to this forum
❤️ பாசம் ❤️
« on: September 02, 2022, 04:35:59 AM »

அம்மாவின் பாசமோ அளவில்லாதது
அப்பாவின் பாசமோ புறம் அறியாதது
சகோதர பாசமோ சண்டையிட்டாலும் உடனிருப்பது..
இவையாவும் ரத்தபாசமாய் பிறப்பால் வந்தது...

காதலால் வரும் பாசமோ
கரை சேரும் வரயே
கரை சேராக்காதல்
கரைந்து தான் போகும்
காற்றோடு காற்றாக...

மணவாழ்க்கை பாசமோ
மகிழ்ச்சியாய் இருக்கும் வரை..
பரஸ்பரம் குறையுமானால்
பாசமும் பாசாங்காய் போகும்..

எதிர்பார்ப்பு ஏதும் இல்லாமல்
நம் நிலை எதுவாயினும்
உடனிருந்து உலகெங்கும் பரவிக்கிடப்பது
தோழமை எனும் பாசமே..

அன்பால் அரவணைத்து
கரம் கொண்டு கண்ணீர் துடைத்து
கட்டி தழுவி கை கொடுத்து
நாம் விழும் நொடி யாவும்
தாங்கி நிற்பது
தோள் கொடுக்கும் தோழமையே..

உள்ளங்கள் பல

பாசம் எனும் மழை வேண்டி
வானம் பார்த்த பூமியாய்
திக்கு முக்காடி தவிக்கின்றன..
அன்பும் அரவணைப்பும் வேண்டி
மனம் ஆரவாரம் செய்கிறது...

பாச மழையில் நனைபவனுக்கோ
தனிமையின் தாக்கம் தெரிவதில்லை
மனப்பசியின் போராட்டம் புரிவதில்லை

பாசக்கயிறு
உயிரை காக்க மட்டுமே
 பயன்படுத்து.
உன் கழுத்தை இறுக்க அல்ல

பாசம் மிகவும் கொடியது
அதிகமாய் போனால் வழுக்கும்
அதை தேடி போனால் (மனம்) வலிக்கும் ...

❤❤❤❤❤