Author Topic: ~ பால் அருந்துபவர் பலவான்! ~  (Read 1023 times)

Offline MysteRy

பால் அருந்துபவர் பலவான்!

Drink Lots of milk to cut heart disease

நாளொன்றுக்கு மூன்று தம்ளர் பால் அருந்தினால் இருதய நோய் சம்பந்தமான நோய் வருவதற்கான ஆபத்து குறையும் என்கிறார்கள் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்.

ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் ஹார்வாவார்டு மற்றும் வேஜனிங்ஜென் ஆகிய பல்கலைக் கழகங்களை சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் இத்தகவல் தெரியவந்துள்ளது.

மேலும் தினமும் பால் அருந்துவதற்கும் அல்லது கொழுப்புச் சத்து குறைவான பால் பொருட்களை உட்கொள்வதற்கும் இருதய நோய், ஸ்ட்ரோக் (stroke) க்கிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

"பால் மற்றும் பால பொருட்கள் ஊட்டச்சத்து மிகுந்த மற்றும் ஆரோக்கியமான உணவுகள் ஆகும். இதில் இயற்கையான ஊட்டச்சத்துக்களான கால்சியம், பொட்டாசியம், புரதம் உள்ளிட்டவை அடங்கியுள்ளன" என்று கூறுகிறார் குளோபல் டெய்ரி பிளாட்பார்ம் நிறுவனத்தின் தொழில்நுட்ப இயக்குனரான சின்டி ஸ்விட்சர்.

மேலும் இதேப்போன்று இஸ்ரேலில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றின் அறிக்கை, அமெரிக்க பத்திரிகை ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் கால்சியம் சத்து அதிகம் நிரம்பியுள்ள பாலை அதிக அளவில் எடுத்துக்கொள்வது உடல் எடை குறைப்புக்கு அதிக அளவில் உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக உடல் எடை உள்ள 300 க்கும் அதிகமான ஆண் மற்றும் பெண்களை இரண்டாண்டு காலம் ஆய்வுக்கு உட்படுத்தியதில், கால்சியம் நிறைந்த பால்பொருட்களை உட்கொண்டவர்களுக்கு, அதனை உட்கொள்ளாதவர்களை காட்டிலும் 38 விழுக்காடு உடல் எடை குறைந்தது தெரியவந்துள்ளது. நாளொன்றுக்கு மூன்று தம்ளர் பால் அருந்தினால் இருதய நோய் சம்பந்தமான நோய் வருவதற்கான ஆபத்து குறையும் என்கிறார்கள் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்.

ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் ஹார்வாவார்டு மற்றும் வேஜனிங்ஜென் ஆகிய பல்கலைக் கழகங்களை சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் இத்தகவல் தெரியவந்துள்ளது.

மேலும் தினமும் பால் அருந்துவதற்கும் அல்லது கொழுப்புச் சத்து குறைவான பால் பொருட்களை உட்கொள்வதற்கும் இருதய நோய், ஸ்ட்ரோக் (stroke) க்கிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

"பால் மற்றும் பால பொருட்கள் ஊட்டச்சத்து மிகுந்த மற்றும் ஆரோக்கியமான உணவுகள் ஆகும். இதில் இயற்கையான ஊட்டச்சத்துக்களான கால்சியம், பொட்டாசியம், புரதம் உள்ளிட்டவை அடங்கியுள்ளன" என்று கூறுகிறார் குளோபல் டெய்ரி பிளாட்பார்ம் நிறுவனத்தின் தொழில்நுட்ப இயக்குனரான சின்டி ஸ்விட்சர்.

மேலும் இதேப்போன்று இஸ்ரேலில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றின் அறிக்கை, அமெரிக்க பத்திரிகை ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் கால்சியம் சத்து அதிகம் நிரம்பியுள்ள பாலை அதிக அளவில் எடுத்துக்கொள்வது உடல் எடை குறைப்புக்கு அதிக அளவில் உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக உடல் எடை உள்ள 300 க்கும் அதிகமான ஆண் மற்றும் பெண்களை இரண்டாண்டு காலம் ஆய்வுக்கு உட்படுத்தியதில், கால்சியம் நிறைந்த பால்பொருட்களை உட்கொண்டவர்களுக்கு, அதனை உட்கொள்ளாதவர்களை காட்டிலும் 38 விழுக்காடு உடல் எடை குறைந்தது தெரியவந்துள்ளது.

மேலும், பால்பொருட்கள் இருதய சம்பந்தமான நோய்க்கு காரணமாக அமைகிறது என்பதிலும் உண்மை இல்லை என்றும், உண்மையில் பால் பொருட்கள் உடல் எடையை குறைக்கவே உதவுகிறது என்றும் அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சுமார் 3,50,000 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட 21 ஆராய்ச்சி முடிவுகளின் அறிக்கையை ஆய்வு செய்த அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள், கொழுப்பு நிறைந்த பால்பொருட்களை ஒருவர் சீராக எடுத்துக்கொள்வதற்கும், இருதய சம்பந்தமான நோய் அதிகரிப்பதற்கும் தொடர்பில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.

அதேப்போன்று சுவீடனில் 23,366 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், நாளொன்றுக்கு பரிந்துரைக்கப்பட்ட கால்சியத்தை விட அதிக அளவு கால்சியத்தை எடுத்துக்கொள்ளும் ஒருவருக்கு இருதய நோய் மற்றும் புற்று நோயால் இறக்கும் ஆபத்து 25 விழுக்காடு குறைவதாக தெரியவந்துள்ளதாக அமெரிக்க மருத்துவ ஏடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஆக மொத்தத்தில் பால் அருந்தியவர் பலவான்!