வாழ்க்கை 
எத்தனை விதமான
இயல்பு புரிதல்கள் 
நிறைந்தது....
தன்னை தானே தொலைக்கிறோம்
நம்மில் நாமே தேடுகிறோம்
நம்மை நாமே உணர்கிறோம்...
ஒன்றினை இழந்து பின்
மற்றொன்றை பெறுகிறோம்...
பழங்கள் பிறக்கிறது
ஆனால் பூக்கள் 
இறந்துவிடுகிறது.....
சின்ன சின்னதாக
அன்பை வெளிபடுத்துங்கள்
சில இதங்களை 
வெல்லமுடியும்
இயற்க்கை கூட உன்னை 
புரிந்து கொள்ளும்
நீ காட்டும் பேரன்பின் மூலம்...
யாரையும் பார்த்து
எதிரில் இருப்பது
யாராக இருந்தாலும்
உண்மையை மட்டும் 
பேசுங்கள்....
நிலை கண்ணாடிகள் 
நிஜங்களை மட்டும் 
பிரதிபலிப்பது 
போல......
நமது  வார்த்தைகள் 
நமது மௌனங்கள் 
நம்மின்  செயல்கள் 
சிலருக்கு மருந்தாகலாம்
சிலருக்கு விஷமாகலாம்
தேவைக்கு ஏற்ப பயன்பாடு 
நல்லது...
நம்மில் நம்மில் உணர்வது 
தியானம்...
நம்மில் இருந்து 
பிறரிலும் நமது 
பண்பு உணரபடுவது...
ஞானம்....
......சிற்பி...