Author Topic: காதல் கொண்டேன்  (Read 770 times)

Offline thamilan

காதல் கொண்டேன்
« on: June 11, 2021, 01:15:04 PM »
ஒற்றை பட்டாம்பூச்சியும்
அவளைக்கண்டு வியர்த்தது
இவளுக்கு மட்டும் கடவுள் ஏன்
இரு பட்டாம்பூச்சிகளை
இமைகளாகக் கொடுத்தான் என


முகம் பார்த்து வந்த காதல்
மூன்றே நொடியில் மூழ்கிப் போகும்
அகம் பார்த்து வந்த காதல்
ஆயுள் உள்ளவரை
உன்னைத் தொடரும்


ஒவ்வொரு முறையும்
உன்னைப் பார்த்துவிட்டு
திரும்பும் போதெல்லாம்
உயிரற்ற உடலாகவே திரும்புகிறேன்

நான் விரும்பும் ஒரு உயிர்
என்னை விட்டு விலகி
நிற்கும்  போது தான்
கண்ணீர் துளிகளின் விலை
என்னவென்று